டெல்லி விரைகிறார் மூப்பனார்
சென் னை:
கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிப்பதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் வியாழக்கிழமை டெல்லிவிரைகிறார்.
தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அதிமுக கூட்டணி இன்னும் முழு வடிவம் பெறாத நிலையில், பல் வேறு விதமான விவாதங்கள்,பேச்சுக்கள், ரகசிய பேச்சுக்கள், ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
மார்ச் 1-ம் தேதிக்குள் தங்களது முடிவை திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மூப்பனாருக்கு ஜெயலலிதா கெடு விதித்துள்ளார். இதையடுத்துத.மா.கா. வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது. இருப்பினும் இன்னும் தெளிவான முடிவுக்கு அவர்களால் வர முடியவில்லை.
இந்த நிலையில், த.மா.கா. த லைவர் மூப்பனார், வியாழக்கிழமை மாலை டெல்லி செல்கிறார். அங்கு சோனியா காந்தியுடன் அவர் பேசுகிறார்.மூப்பனாரின் திடீர் டெல்லி பயணத்திற்குக் காரணமாக பல காரணங்கள் கூறப்படுகின்றன.
த.மா.கா.வுக்கு 30 சட்டச பைத் தொகுதிகள் ஒதுக்க ஜெயலலிதா முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கு மூப்பனாரும் சம்மதம் தெரிவித்து விட்டார்.
ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் பத்து இடங்கள் மட்டுமே தர முடியும் என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. இதற்கு மாநிலகாங்கிரஸ் ஒத்துக் கொள்ளவில்லை. இதனால் த.மா.க. தரப்பில் காங்கிரஸை சமாதனப்படுத்த முயற்சி நடப்பதாகக் கூறப்படுகிறது.
மேலும், பாண்டிச் சேரியில் தாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்பதிலும் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
ஆனால் இது தொடர்பாக ஜெயலலிதா தரப்பிலிருந்து உறுதியான பதில் வரவில்லை. இதனால் காங்கிரஸ் தொகுதிப் பங்கீட் டை ஏற்றுக் கொள்வதில்தாமதம் காட்டுகிறது.
இந்தச் சூழ்நிலையில், சோனியாவைச் சந்தித்து நிலைமையை விளக்கி விரைவில் தொகுதிப் பங்கீட் டை இறுதி செய்ய மூப்பனார் முடிவு செய்துள்ளார். இதன்பொருட்டே அவர் டெல்லி செல்வதாக கூறப்படுகிறது.
டெல்லி செல்ல முடிவு செய்வதற்கு முன்பு அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத்துடன் மூப்பனார் இரண்டு முறை தொலை பேசியில்பேசியுள்ளார். அப்போது கூட்டணி குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.
தற்போது இரண்டாவது முறையாக சோனியாவைச் சந்திக்கச் செல்கிறார் மூப்பனார். அ னேகமாக வியாழக்கிழமையே கூட்டணி குறித்த முடிவுதெரிய வரலாம் என்கிறது சத்திய மூர்த்தி பவன் வட்டாரம்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications