5 ம் தேதி சென்னை திரும்புகிறார் ஜெ.
சென் னை:
ஹைதராபாத் சென்றுள்ள முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மார்ச் 1-ம் தேதி சென்னை திரும்புதவற்குப் பதில்5-ம் தேதிதான் சென்னை வருகிறார்.
ஜெயலலிதா தற்போது ஹைதராபாத் நகரில் உள்ளார். அங்கு போவதற்கு முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு கெடு விதித்து விட்டுச் சென்றார். மார்ச்1ம் தேதி வருவதற்குள் ஒரு முடிவை எடுத்து வையுங்கள் என்று அவர் கூறி விட்டுச் சென்றார். இதனால் த.மா.கா வட்டார மே தலையை உ டைத்துக்கொண்டு உட்கார்ந்துள்ளது.
இந்த நிலையில் 1-ம் தேதி ஜெயலலிதா வர மாட்டார் என அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக, 5-ம் தேதிதான் அவர்திரும்புகிறார். இதனால் 5-ம் தேதி வரை த.மா.காவின் கெடு நீடிக்கிறது. அதற்குள் அவர்கள் முடிவெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
5-ம் தேதி சென் னை திரும்பிய உடன் கூட்டணிக் கட்சிகளுடன் வி ரைவாகப் பேச்சு நடத்தி தொகுதிப் பங்கீட் டை ஜெயலலிதா முடித்து விடுவார் என்றுகூறப்படுகிறது. அனேகமாக 5-ம் தேதி யே கூட அவர் தொகுதிப் பங்கீடு குறித்து அறிவிக்கலாம் என்றும் அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications