அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் புலிகள் தயார்

Subscribe to Oneindia Tamil

துபாய்:

தனி ஈழம் என்ற கோரிக்கையை விடுதலைப் புலிகள் கைவிடுவதாக அறிவித்துள்ளது, இலங்கையில் 17 வருடங்களாக நடந்து வரும் இனப்பிரச்சனைக்குத்தீர்வு காணும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த புலிகள் தயாராக இருப்பதையே காட்டுகிறது என்று இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்லட்சுமண் கதிர்காமர் துபாயில் தெரிவித்தார்.

இதுகுறித்து துபாயில், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் காலீஜ் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி:

இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவ வீரர்களுக்கும் இடையே சண்டைநடந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்தார்கள். சண்டை நிறுத்தம் தற்போது 3 முறைநீட்டிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே தற்போது அவர்கள், தனி ஈழம் கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்துள்ளனர். இது இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையைத்தொடங்குவதற்குப் புலிகள் தயாராக இருப்பதையே காட்டுகிறது.

துபாயில் மட்டும் இலங்கையைச சேர்ந்தவர்கள் 1, 50, 000 க்கும் மேல் உள்ளனர். மேலும் ஐக்கிய அரபு நாடுகளுடன், பொருளாதாரம், முதலீடுஉள்பட பல துறைகளில் இணைந்து செயல்படவும் இலங்கை தயாராக உள்ளது என்றார்.

முன்னதாக, ஐக்கிய அரபு நாடுகளுக்கு மூன்று நாட்கள் சுற்றுப் பயணமாக, இலங்கை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் சென்றுள்ளார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+