கை விடுகிறார் கிருஷ்ணா .. திணறுகிறது சென்னை
சென்னை:
சென்னைக்கு வரும் கிருஷ்ணா நீரின் வரத்து குறைந்து விட்டது. அடுத்த 45 நாட்களுக்கு மட்டுமே தற்போதுஇருப்பிலுள்ள தண்ணீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆந்திரமாநிலத்திலிருந்து வரும் கிருஷ்ணா நீர், கண்டலேறு நீர்த் தேக்கத்தில் தேக்கி வைக்கப்பட்டு அங்கிருந்தகால்வாய்கள் மூலம் சென்னை புறநகரிலுள்ள பூண்டி ஏரிக்குக் கொண்டு வரப்படுகிறது.
பூண்டி தேக்கத்திலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. தற்போதுகிருஷ்ணா நீரின் வரத்து குறைந்து விட்டது. கண்டலேறு நீர்த்தேக்கத்தில் நீர் இருப்பு குறைந்து விட்டதே இதற்குக்காரணம்.
கண்டலேறு நீர்த்தேக்கத்தில் தற்போது 12.5 டிஎம்.சி நீர் மட்டுமே உள்ளது. 8.5 டிஎம்சிக்கும் கீழே நீர் இருப்புகுறைந்து விட்டால் சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியாது.
கண்டலேறு அணையிலிருந்து கால்வாய்கள் மூலம் நகருக்கு வரும் தண்ணீரை ஆங்காங்கே உள்ள கிராம மக்கள்பம்ப் செட் வைத்து திருடி விடுகின்றனர். இதனால் பூண்டி நீர்த் தேக்கத்திற்கு உரியநீர் வந்து சேர்வதில்லை.
தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில், 31 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே இருப்பில் உள்ளது. இதன் மொத்தகொள்ளளவு 32.30 மில்லியன் கன அடியாகும்.
கிருஷ்ணா நீரின் வரத்து குறைந்து விட்டதால், பொன் னேரி, மீஞ்சூர், பஞ்செட்டி, கும்மிடிப்பூண்டி ஆகிய ஏரிகளில்இருந்து ஆழ்குழாய்க் கிணறுகள் மூலம் நீர் எடுத்து அவற்றை நகருக்கு விநியோகிக்க சென் னை குடிநீர் வாரியம்(மெட்ரோ வாட்டர்) முடிவு செய்துள்ளது.
என்று தணியும் சென்னை தண்ணீர்ப் பிரச்சினை?.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications