சூடானிலிருந்து குழந்தைத் தொழிலாளர்கள் விடுவிப்பு
ஜெனிவா:
யூனிசெப்பின் கடும் முயற்சியால் சூடான் தீவிரவாதிகளிடம் அடிமைகளாக வாழ்ந்து வந்த 2,600 க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள்விடுவிக்கப்பட்டனர் என்று யூனிசெப் தலைவர் கரோல் பெலாமி புதன்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
சூடானிலிருந்து கடும் முயற்சி செய்து 2, 600 குழந்தைத் தொழிலாளர்களை விடுவித்துள்ளோம். இவர்கள் அனைவரும் 8 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள்.இவர்கள் ரம்பெக் டவுனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனர். இவர்களது உறவினர்கள் எங்குள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம்.
இவர்கள் அனைவரும் சூடான் மக்கள் விடுதலை படையினரிடம், அடிமைகளாக வேலை செய்து வந்தார்கள். சூடான் தீவிரவாதிகளிடம் அடிமைகளாகவாழ்க்கை நடத்தும் குழந்தைத் தொழிலாளர்களை யூனிசெப் கண்டறிந்தது. இதையடுத்து கடந்த வருடம் அக்டோபர் மாதம் இதுகுறித்து சூடான்தீவிரவாதிகளிடம் குழந்தைத் தொழிலாளர்களை விடுவிக்கும் படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவர்கள் சூடானில் உள்ள பார் அல் காசலில் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர்.
2,600 குழந்தைத் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியடைய வைக்கிறது. இருப்பினும் சூடான் தீவிரவாதிகளிடம் 3 லட்சத்துக்கும்மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் சண்டையிடுவதற்காகவும், கூலியாட்கள் வேலைக்காகவும், செக்ஸ் தொழிலுக்காகவும் பயன்படுத்தப்பட்டுவருகிறார்கள் என்பது வருத்தப்பட வைக்கிறது.
இருப்பினும் அனைத்து குழந்தைத் தொழிலாளர்களையும் விடுவிக்க யூனிசெப் அனைத்து விதமான முயற்சிகளையும் மேற் கொள்ளும். ஏற்கனவே 9, 000க்கும் மேற்பட்ட குழந்தைத் தொழிலாளர்களை சூடான் தீவிரவாதிகளிடமிருந்து யூனிசெப் விடுவித்து.
சூடானில் தங்களுக்கு தனி நாடு தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 1983 ம் ஆண்டு முதல் சூடான் மக்கள் விடுதலை முன்னணி படையினர்போராடி வருகிறார்கள். விடுதலை முன்னணியில் உள்ளவர்கள் அனைவரும் முஸ்லீம்கள். பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்தச் சண்டையில் இதுவரை 2மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications