மும்பையில் பட்ஜெட் இருட்டடிப்பு
மும்பை:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதை மும்பை நகர்வாசிகள் காண முடியாதவாறு செய்துள்ளனர்.
அந்நகர கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள். கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சிலரை போலீசார் கைது செய்ததற்கு எதிர்ப்புதெரிவித்து இவ்வாறு செய்யப்பட்டதாக மகாராஷ்டிரா கேபிள் ஆபரேட்டர்கள் சங்க பேரவையின் தலைவர் ரவிசிங் தெரிவித்துள்ளார்.
கேபிள் டி.வி. வசதி பெற்றவர்களிடம் மாத சந்தாவோடு சேர்த்து 30 ரூபாய் பொழுதுபோக்கு வரி வசூலித்துஅரசுக்கு செலுத்துமாறு மகாராஷ்டிரா மாநில அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர்நீதி மன்றம், திரையரங்குஉரிமையாளர்கள் பொழுதுபோக்கு வரி வசூலித்து அரசுக்கு செலுத்துவது போல் கேபிள் ஆபரேட்டர்களும்செலுத்தலாம் என்று கூறி விட்டது.
இதனையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில், தங்களிடம் உள்ள சந்தாதாரர்களின் எண்ணிக்கையை சரியாகதரவில்லை எனக் கூறி பல கேபிள் ஆபரேட்டர்களை கைது செய்துள்ளது.
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ரவி சிங், கேபிள் சந்தாவையே சிலர் சரியாக தருவதில்லை.அவர்களிடமிருந்து வரி வசூல் செய்து தருவது என்றால் ஆபரேட்டர்களின் சொந்த பணத்தை தான் கட்டவேண்டியிருக்கும்.
அரசு அமைத்த கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் அரசு தரப்பினரை கொண்ட கமிட்டி அளித்த அறிக்கைப்படி வரிவசூலிப்பை அரசே மேற்கொள்ள வேண்டும் எனக் கோரினார்.
கேபிள் ஆபரேட்டர்களின் இக்கோரிக்கையை ஏற்க மறுத்த மாநில வருவாய்த்துறை மந்திரி அசோக் சவாண்,மும்பை நகர ஆபரேட்டர்கள் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரியை அரசுக்கு செலுத்துவதில்லை.
கேபிள் ஆபரேட்டர்கள் தங்களிடமுள்ள அனைத்து சந்தாதாரர்களின் விபரங்களை தரும் வரை போலீசாரின்நடவடிக்கை தொடரும் எனக் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications