20 தொகுதிகள் கேட்கும் இந்திய கம்யூனிஸ்ட்
சென்னை:
அதிமுக கூட்டணியில் தங்கள் கட்சிக்கு 20 சட்டசபைத் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட்கட்சி தீர்மானம் நிறை வேற்றியுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தனது ஹைதராபாத் பயணத் தை முடித்துக் கொண்டு புதன்கிழமைசென்னை திரும்புகிறார். 1-ம் தேதி அவர் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோச னைநடத்தவுள்ளார்.
அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களது நிலைகுறித்து இன்னும் குழப்பமாக வே உள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமே கொஞ்சம் தெம்பாக காணப்படுகிறது.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி புதிய குண்டைத்தூக்கிப் போட்டுள்ளது. இந்தக் கட்சி 1996-ம் ஆண்டு திமுக கூட்டணியில் இருந்தது. அப்போது 11 இடங்களில்போட்டியிட்டு 8 இடங்களில் வெற்றி பெற்றது. அப்போது ரஜினி அலையும், ஜெயலலிதா எதிர்ப்பு அலையும்பலமாக வீசிய நேரம்.
இப்போது இக்கட்சி அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கூடுதல் இடங்களக் கேட்க இக்கட்சி இப் போது முடிவு செய்துள்ளது. தொகுதிப் பங்கீடு மற்றும் தேர்தல் குறித்து விவாதிப்பதற்காகஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அவசரப் பொதுக் குழுக் கூட்டம் சென் னையில் செவ்வாய்க்கிழமை அவசரமாககூட்டப்பட்டது.
கட்சியின் மாநில செயலாளர் நல்லக்கண்ணு கூட்டத்திற்குத் தலை மை வகித்தார். மாநில அளவிலான நிர்வாகிகளும்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், முதலில் சமீபத்தில் மரணமடைந்த இந்திரஜித் குப்தாவுக்குஇரங்கல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அப் போது 20தொகுதிகள் கேட்பது எனவும், அதற்கு குறைவாக கொடுத்தாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் 11இடங்களுக்குக் குறைவாக கொடுத்தால் ஏற்றுக் கொள்வதில் லை என்று முடிவு செய்யப்பட்டது. 11 இடங்கள் தவிரகூடுதல் 9 இடங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இருப்பினும் அந்தத் தொகுதிகள் குறித்து முடிவுசெய்யப்படவில் லை.
இது தொடர்பாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மேலும் பல தீர்மானங்களும் நிறை வேற்றப்பட்டன.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 20 இடங்களைக் கோரவுள்ளதால், அதிமுக கூட்டணியில் புதுக் குழப்பம்உருவாகியுள்ளது. ஒரு பக்கம் மூப்பனார் குழப்பி வருகிறார். மறு பக்கம், காங்கிரஸ் மெளனமாக உள்ளது. இந்த நிலையில், சென்னை திரும்பிய பிறகு ஜெயலலிதா அதிரடியாக ஏதாவது முடிவை அறிவித்தாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற பேச்சும் நிலவுகிறது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications