குஜராத் நிவாரணப்பணி குறைபாடு குறித்து விசாரணை
டெல்லி:
குஜராத் பூகம்ப நிவாரணப்பணிகள் பற்றிய எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். அக்குற்றச்சாட்டுகள்உண்மையில்லையெனில், குற்றம் சாட்டியவர்கள் சட்டத்திற்கு உள்படுத்தப்படுவர் என பிரதமர் வாஜ்பாய் செவ்வாயன்று நாடாளுமன்றத்தில்தெரிவித்தார்.
குஜராத் பூகம்பம் குறித்த 2 நாள் விவாததின் போது எதிர்க்கட்சியினர் கூறிய குற்றச்சாட்டுகளால் கோபமடைந்த பிரதமர் தனது பதிலுரையில்,
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் உதவிக்கரம் நீட்டும் போது எதிர்க்கட்சியினர் அதனை வைத்து அரசியல்நடத்தி கொண்டிருக்கின்றனர்.
நிவாரணப்பணிகளில் குறையிருப்பதாகவும் சிறுபான்மையினர் மற்றும் ஏழைகள் வஞ்சிக்கப்படுவதாக எதிர்க்கட்சியினர் அரசின் மீது தொடர்ந்து குற்றம்சாட்டி வருவதால், வெளிநாட்டில் இந்தியாவை பற்றி தவறான கருத்துகள் பரவி வருகின்றன.
பா.ஜ.க.வும் எதிர்க்கட்சியாக பணியாற்றியதுண்டு. ஆனால், தற்போதைய எதிர்க்கட்சிகள் போல் மனிதாபிமான உதவி தேவைப்படும் விஷயங்களைஅரசியலாக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கப்படும். குற்றச்சாட்டுகள் தவறானால், அதனை சுமத்தியவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்குஉள்பட வேண்டும் என்றார்.
சோனியா காந்தியின் குற்றச்சாட்டுகளை குறி வைத்து பிரதமர் பதிலளித்த போது, சோனியாவிற்கு பதில் சிவராஜ் பாட்டீல் பதிலளித்தார்.
பிரதமர் பதிலளித்தபின் பேசிய சோம்நாத் சட்டர்ஜி, மேற்கு வங்காளம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது, மத்திய நிதி உதவி கோரியதற்கு நிதி இல்லைஎன பிரதமர் பதிலளித்ததை நினைவு கூர்ந்தார்.
இதே நிலைதான் தங்களுக்கும் நேர்ந்ததாக ஒரிஸ்ஸாவின் காங்கிரஸ் எம்.பி.க்கள் தெரிவித்தனர். எதிர்க்கட்சிகளின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்குபதிலளித்த உள்துறை மந்திரி அத்வானி,
குஜராத் நிலவரம் வேறு. தனது குடும்பத்தினரை இழந்த அரசு ஊழியர்கள் கூட அரசின் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நிர்வாக தரப்பின்இத்தகை நடவடிக்கைகளை பாராட்டுவதை விட்டு நிர்வாகத்தை குறை கூறிக் கொண்டிருப்பது நல்லதல்ல என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications