சீனாவிலிருந்து பயிற்சி விமானங்கள் வாங்குகிறது இலங்கை
கொழும்பு:
புலிகளின் மீதான தனது தாக்குதலை தொடர சீனாவிடம் இருந்து புதிய விமானங்கள் வாங்குகிறது இலங்கை.
இதுகுறித்து, இலங்கையில் இருந்து வெளியாகும் சன்டே ஐலண்ட் பத்திரிகை வெளியிட்டு தகவலில்,
இலங்கை விமானப்படைக்கு கடந்த வாரம் 6 கே-8 வகை பயிற்சி விமானங்கள் சீனாவிடம் இருந்துவாங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே, 10 பி.டி.6 வகை பயிற்சி விமானங்களை சீனாவிடமிருந்து இலங்கைவாங்கியிருந்தது.
சூப்பர் சோனிக் ஜெட் போர் விமானங்களை இயக்குவதற்கு தேவையான பயிற்சிகளை அளிக்க புதிய பயிற்சிவிமானங்கள் பயன்படுத்தப்படும்
இத்தாலியின் சியாய் மார்சடீஸ் மற்றும் சீனாவின் எப்.டி.5 வகை பயிற்சி விமானங்களுக்கு பதிலாக இந்த புதியவகை விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன.
விடுதலைப் புலிகளிடம் இருந்து ஜாப்னா பகுதியை மீண்டும் கைப்பற்ற விமான தாக்குதல் நடத்தி வரும் இலங்கைஅரசு, தனது விமானப்படைக்கு பலம் சேர்க்க இதுவரை 50 விமானங்களை வாங்கி உள்ளது என அப்பத்திரிகையில்தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே, இலங்கை அரசு விமானத் தாக்குதலை தொடர்ந்தால் தாங்கள் அறிவித்துள்ள சண்டை நிறுத்தத்தைவாபஸ் பெற்றுக் கொள்வோம் என புலிகள் எச்சரித்து உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்












Click it and Unblock the Notifications