For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறார் ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மத்திய பட்ஜெட்டை வரவேற்கிறார் முன்னாள் நிதியமைச்சரும் த.மா.கா.தலைவர்களுள் ஒருவருமான ப.சிதம்பரம்.

சென்னையில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், மத்திய பட்ஜெட்டை வரவேற்ற அவர்,

கடந்த இரண்டு பட்ஜெட்டுகளில் காணப்பட்ட குறைகள் நீக்கப்பட்டு பொருளாதார சீர்திருத்தத்தை மீண்டும் மேற்கொள்ள வழிவகை காணப்பட்டுள்ளது.

கலால் வரிவிதிப்பில் கூடுதல் வரியை நீக்கியதோடு வரிவிகிதங்கள் 16% மிகாதது குறிப்பிடத்தக்கது.

விவசாயப் பொருட்கள் தவிர மற்றவற்றிற்கு சுங்கவரியை அதிகரிக்காததோடு, முதலீட்டுத்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள்எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்க்கவும், விலைவாசி உயர்வை தடுப்பதற்காகவும் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனதெரிவித்துள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X