மத்திய பட்ஜெட்: தமிழகத்துக்கு என்ன கிடைத்தது?
சென்னை:
மத்திய பட்ஜெட் தமிழகத்திற்கு பல சலுகைகளை வழங்கியுள்ளது. சில சலுகைகளை ரத்து செய்துள்ளது.
மொத்தத்தில் வளர்ச்சியை நோக்கி செல்லக் கூடிய பட்ஜெட் என தமிழக முதல்வர் கருணாநிதியும், பொருளாதார சீர்திருத்தங்களை மீண்டும் செயல்படுத்தக் கூடியபட்ஜெட் என முன்னாள் மத்திய நிதியமைச்சரான த.மா.கா.வின் ப.சிதம்பரமும் இதனை வரவேற்றுள்ளனர்.
தமிழகத்தின் நாங்குநேரியில் அமைக்கப்பட்டுவரும் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு அளிக்கப்பட்ட நீணட் கால சலுகைகள், தமிழகத்தின் கடற்கரைபகுதிகளில் உள்ள பல்வேறு துறைமுகங்களின் மேம்பாட்டிற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை வரவேற்கப்பட்டுள்ளன.
கார்களின் விற்பனை அதிகரிக்குமா?
இறக்குமதி கார்களின் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளதால், சென்னையில் உள்ள போர்டு, ஹூண்டாய் போன்ற நிறுவனங்களின் கார்களின் விலைகுறையும். போர்டு ஐகான் காரின் விலை 29000 ரூபாய் குறைகிறது. இதனால், கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் அதிகமுள்ள டெக்ஸ்டைல் துறையில் பெரிய நூற்பாலைகளுக்கு சலுகை அளிக்கப்பட்ட கையோடு சிறிய நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டசலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அவர்களை சமாதானப்படுத்த ஆடைத் தொழில், தோல் தொழில் போன்றவற்றிற்கு சிறப்பு தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமாற்றமளிக்கிறதா?
இந்திய மருத்துவ உலகில் தனி இடம் பிடித்துள்ள சென்னையை சேர்ந்த அப்போலோ மருத்துவ மனைகளின் தலைவரான பிரதாப் ரெட்டி, மருத்துவ உலகிற்குதேவையான சலுகைகளை அளிக்காதது ஏமாற்றமளிப்பதாக கூறினார்.
சினிமாத் துறைக்கு சலுகைகள் பல வழங்கியுள்ளதால், கோலிவுட்டினர் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.
விவசாயப் பொருட்களின் மீதான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு விவசாயத் தொழில்துறை காப்பாற்றப்படும் எனகருதுகின்றனர்.
என்ன சொல்கிறார் ஜெ.?
மத்திய பட்ஜெட் சாத்தியமில்லாத திட்டங்களை கொண்டுள்ளதால் மக்களுக்கு எதிரானது. மேலும் வரும் தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்பட்டதுஎன அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications