மும்பை தாதாக்கள், திரைபடத்துறையினர் தொடர்பு: விசாரணை தீவிரம்
மும்பை:
திரைப்பட தயாரிப்பாளரும், வைர வியாபாரியுமான பரத் ஷா உள்பட திரைப்பட பிரமுகர்களுக்கும், மும்பை ரவுடிகள் தாவூத் இப்ராஹிம் மற்றும்சோட்டா ஷகீலுக்கும் இடையே தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மும்பை குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடைய தாதா தாவூத் இப்ராஹிமும், சோட்டா ராஜனும் இணைந்து செயல்பட்டு வந்தார்கள். இதற்கிடையே,1990 ம் ஆண்டு இருவருக்கிடையே, ஏற்பட்ட தகராறில் இருவரும் தனித்தனியாகப் பிரிந்தனர்.
இந்த நிலையில் சோட்டாராஜனின் சகோதரரும், திரைப்பட தயாரிப்பாளருமான தீபக் நிகால்ஜிக்கும் திரைப்பட இயக்குநர் மகேஷ் மஞ்ரேக்கருக்கும்தொடர்பிருக்கலாம் என்று போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த வாரம் போலீஸார் மகேஷிடம் விசாரணை நடத்தினார்கள்.
மேலும், மகேஷ் மஞ்ரேக்கர் தயாரித்த வாஸ்த்தவ் என்ற படம் தாதாக்களைப் பற்றிய படமாகும். இந்தப் படத்தில் தாதாக்களின் தலைவராக நடித்தசஞ்சய் தத்துக்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில்,
வைர வியாபாரி பரத் ஷா மற்றும் நஸீம் ரிஸ்வி ஆகியோர் சோரி சோரி சுப்கே சுப்கே என்ற திரைப்படத்தில் சேர்ந்து பணிபுரிந்தனர். அவர்களுக்கும்,தாதாக்களுக்கும் தொடர்பு இருக்கிறது என்று தெரிய வந்தது. இதையடுத்து பட இயக்குநர் மகேஷ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்துவருகிறது.
மகேஷூக்கு தாதாக்களுடன் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. பரத் ஷாவும், ரிஸ்வியும் ஏற்கனவே கைது செய்யப்பட்டுவிட்டனர்.
கடந்த 1980 ல் தாதா தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு வைத்திருந்த பல திரைப்பட பிரமுகர்களை தற்போது விசாரணை செய்து வருகிறோம். மேலும்சோட்டா ராஜன், 1993 ம் ஆண்டில் மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய திரைப்பட பிரமுகர்கள் பெயரை வெளியிடுவேன் என்று மிரட்டல் விடுத்துவருகிறார்.
இந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளிகள் அனைவரும் சினிமா பிரமுகர்களாக இருக்கலாம் என்றசந்தேகமும் நிலவுகிறது.
சோட்டா ராஜனின் மிரட்டலால் இவர்கள் அனைவரும் ராஜனுடன் அமைதிப் பேச்சு நடத்தி பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றுநினைக்கிறார்கள். ஆனால் சோட்டா ராஜனுடன் தொடர்புடைய திரைப்பட பிரமுகர்கள் குறித்து நாங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications