பயனுள்ள பட்ஜெட் .. கருணாநிதி
சென்னை:
2001 - 2002 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும். அதே நேரம் இந்த பட்ஜெட் பொதுமக்களைஎந்த விதத்திலும் பாதிக்காது என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறினார்.
பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள பல்வேறு நலத்திட்டங்களை வரவேற்றுள்ள கருணாநிதி, இந்த பட்ஜெட் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
பட்ஜெட் குறித்து கருணாநிதி மேலும் கூறியதாவது:
பட்ஜெட்டில் தபால் கட்டணம் உயரும் என்று கூறப்பட்டுள்ளது. இது பொதுமக்களை பெரிய அளவில் பாதிக்காது. கிராமப்புற வளர்ச்சிக்காககோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. மாநிலங்களுக்கு சாலைப் பராமரிப்பு, பாலங்கள் கட்டுதல் மற்றும்நீர்ப்பாசனத் துறைக்குக் கூடுதல் நிதி கிடைக்கும்.
விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்கும் திட்டத்தால் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைவார்கள்.
கம்ப்யூட்டர் கல்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியாலும் பல மாணவர்கள் பயனடைவார்கள் என்றார் கருணாநிதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications