மூப்பனார் நல்ல முடிவு எடுக்க வேண்டும் .. சுவாமி யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும். அதற்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் நல்ல முடிவுஎடுக்க வேண்டும் என்று தமிழக ஜனதாக் கட்சித் த லைவர் சுப்பிரமணிய சுவாமி கூறியுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் நீடிக்குமா, இல்லையா என்பதுதான் தமிழக டீக்கடைகளில் இப்போதைய சூடானவிவாதமாக உள்ளது. ஜெயலலிதா விதித்துள்ள கெடு முடிய இன்னும் நான்கு நாட்க ளே உள்ள நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ்கட்சி விரைவாக, புத்திசாலித்தனமான முடிவை எடுக்க வேண்டும் என்று கோரி பல்வேறு தலைவர்கள் அக்கட்சித் தலைவர்மூப்பனாரை தினமும் சந்தித்து ஆலோசனை கூறி வருகிறார்கள்.

சோ, கி.வீரமணி வரிசையில் தற்போது, ஒரு காலத்தில் அரசியலைக் கலக்கிய சுப்பிரமணிய சுவாமி சென்று மூப்பனாரைச்சந்தித்தார். வியாழக்கிழமை சுப்பிரமணிய சுவாமியும், காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் மூப்பனாரை அவரது இல்லத்தில்சந்தித்து பேசினர். தனித்தனியாக இந்த சந்திப்பு நடந்தது.

மூப்பனாரை சந்தித்து விட்டு வந்த காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கூட்டணி மற்றும்தொகுதிப் பங்கீடு தொடர்பாக தொடர்ந்து ஆலோச னை நடத்தி வருகிறோம்.

பாண்டிச்சேரியில் ஆட்சி அமைப்பது காங்கிரஸின் உரிமை. அதை இழக்க நாங்கள் தயாராக இல்லை என்றார்.

சுப்பிரமணிய சுவாமி:

சுப்பிரமணிய சுவாமியிடம் நிருபர்கள் கேட்டபோது, தமிழகத்தில் மீண்டும் காமராஜர் ஆட்சி வர வேண்டும். அதற்குமூப்பனாரால் மட்டுமே முடியும். எனவே அவர் தேர்தல் கூட்டணி தொடர்பாக நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

மூன்றாவது அணி அ மைப்பதற்கான வாய்ப்பு குறித்தும் மூப்பனாருடன் பேசினேன் என்றார்.

இவர்கள் தவிர முன்னாள் காங்கிரஸ் தலைவர் அன்பரசுவும் மூப்பனா ரைச் சந்தித்துப் பேசினார். அவரிடம் செய்தியாளர்கள்கேட்டபோது, அதிமுகவுடன் மட்டு மே காங்கிரஸும், தமிழ் மாநில காங்கிரசும் கூட்டணி வைக்க வேண்டும் என்றார்.

திருச்சி யையும் தருகிறார் ஜெ.?

சட்ட சபைத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு குறித்து ஜெயலலிதாகிட்டத்தட்ட முடிவு செய்து விட்டதாகவே கூறப்படுகிறது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 40 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு10 தொகுதிகள் மற்றும் திருச்சி எம்.பி தொகுதியை ஒதுக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

இருப்பினும் இந்த எண்ணிக்கையில், காங்கிரஸுக்குத் திருப்தி ஏற்படவில்லை. பாண்டிச் சேரியையும் விட்டு விட அதற்குமனமில்லை. எனவே தான் கூட்டணியில் இழுபறி நீடிக்கிறது. காங்கிரஸ் தலைவர் இளங்கோவனை சமாதானப்படுத்தும்முயற்சியில் தற்போது மூப்பனார் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

எத்தனை இழுபறி வந்தாலும், எவ்வளவு நாள் அது நீடித்தாலும் கூட அதிமுக வை விட்டு அவர் வெளியேற மாட்டார் என்றும்கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+