மாநகராட்சி நிலத்தை சுருட்டினார் அமைச்சரின் அண்ணன்?
சென்னை:
தனது சகோதரர் மாநகராட்சி நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என்கிறார் தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அமைச்சர், த.மா.கா.வைச் சேர்ந்த சென்னை மாநகராட்சி உறுப்பினரான வெற்றிவேல் கூறியுள்ள குற்றச்சாட்டுஆதாரமற்றது.
அவர் குறிப்பிட்டுள்ள இடத்தை கடந்த 30 வருடங்களாக விளம்பர நிறுவனம் நடத்தி வரும் எனது சகோதரர், 1989 லேயே யுனைடெட் பிரீவரீஸ்நிறுவனத்திடமிருந்து வாங்கியுள்ளார்.
இது பற்றி அறிந்திருந்தும் இப்பிரச்சனையை மாநகராட்சிக் கூட்டத்தில் எழுப்பாமல் இருக்க தன்னை தனிப்பட்ட முறையில் கவனிக்க வேண்டும் எனஎனது சகோதரரிடம் கூறியிருக்கிறார் வெற்றிவேல்
மாநகராட்சி கூட்டத்தில் இப்பிரச்சனை குறித்து தெரிவிக்க வாய்ப்பு மறுக்கப்படுவதாக கூறும் வெற்றிவேல் கடந்த 6 மாதத்திற்கு முன்புமாநகராட்சியிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உண்மை நிலையை விளக்க வேண்டும் என கோரி மாநகராட்சி கமிஷனரும் கடிதம் எழுதியிருக்கிறார்.
இதனிடையே, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறிய வெற்றிவேல் அடுத்த 48 மணிநேரத்திற்குள் அவற்றை திரும்ப பெற்றுக் கொள்ளாவிட்டால்அவர் மீது வழக்கு தொடுக்கப்படும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அவரது குற்றச்சாட்டுகளை ஒளிபரப்பு செய்த தனியார் தொலைகாட்சி நிறுவனங்கள், இதனை வெளியிட்ட இரு ஆங்கில நாளேடுகள் போன்றவற்றிற்கும்இது போன்ற நோட்டிஸ் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications