புலிகளின் வங்கிக் கணக்குகள்: இலங்கை அரசு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

துபாய்:

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருப்பதை இலங்கை அரசு வரவேற்பதாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண்கதிர்காமர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

ஐக்கிய அரபு நாடுகளுக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாகச் சென்றுள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் இதுகுறித்து கல்ப்நியூஸ் என்ற பத்திரிக்கைக்கு அவர் அளித்த பேட்டி:

இங்கிலாந்தில் விடுதலைப் புலிகளுக்குத் தடை விதித்திருப்பதை இங்கிலாந்து வரவேற்கிறது. விடுதலைப்புலிகளுக்கு பல்வேறு நாடுகளிலிருந்து கிடைக்கும்நிதியுதவியை தடுப்பது மட்டும் எங்கள் குறிக்கோளாகாது.

இலங்கையில் அமைதியை ஏற்படுத்துவதும் எங்கள் குறிக்கோளாகும். தற்போது இங்கிலாந்து புலிகளுக்குத் தடை விதித்துள்ளதால் விரைவில் அமைதிப்பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.

மேலும் விடுதலைப்புலிகளுக்கு வங்கியில் உள்ள கணக்குகள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். மேலும் கனடா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும்ஜெர்மனில் விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும்.

லண்டனிலிருந்து ஆண்டன் பாலசிங்கம், இங்கிலாந்து புலிகள் இயக்கத்துக்கு விதித்துள்ள திடீர் தடையால் நார்வே முயற்சியால் ஏற்படும் அமைதிப்பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்படும் என்று கூறியுள்ளார். அப்படி எதுவும் ஏற்படாது. அமைதி முயற்சியில் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

இங்கிலாந்து புலிகள் இயக்கத்துக்குத் தடை விதித்திருந்த போதிலும் அமைதி முயற்சியைக் கைவிட மாட்டோம் என்று புலிகள் கூறியிருப்பது போல்எதுவும் நடக்காது. அவர்கள் தங்கள் அமைதி முயற்சியிலிருந்து பின்வாங்கவும் வாய்ப்புக்கள் உள்ளன.

மேலும் இந்த வார இறுதியில் லண்டன் சென்று இங்கிலாந்து அரசிடம், புலிகள் மீது தடை விதித்ததற்கு நன்றி தெரிவிக்கவுள்ளேன்.

மேலும், புலிகளின் தனி ஈழம் என்ற கோரிக்கையைத் தவிர்த்து அவர்களுடன் வேறு விஷயங்கள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசுதயாராக இருக்கிறது.

மேலும், இருதரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் அமைதிப் பேச்சுவார்த்தைக்குக் கொண்டு வர நார்வே எடுத்து வரும் முயற்சிபாராட்டுக்குரியது என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+