இளங்கோவன் ஆணவப் பேச்சு .. கண்டிக்கிறது பா.ம.க
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சித் த லைவர் டாக்டர் ராமதாஸ் காங்கிரஸ் கட்சி குறித்து எந்தக் கருத்தும் கூறாத நிலையில்,அவர் குறித்து காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் தேவையில்லாமல் விமர்சிப்பது கண்டிக்கத்தக்கது என்றுபாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
வியாழக்கிழமை சென்னையில் இளங்கோவன் அளித்த பேட்டி, அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகஎப்போது டாக்டர் ராமதாஸ் மாறினார் என்று தெரியவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு பா.ம.க. தரப்பில் கடும்கண்டனம் எழுந்துள்ளது.
பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சி குறித்து பா.ம.க.தரப்பில் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர்கள் தேர்தல் கூட்டணி தொடர்பாக எடுத்து வரும் நடவடிக்கைகுறித்து ராமதாஸ் உள்பட யாருமே விமர்சனம் செய்யவில்லை.
இந்த நிலையில், ராமதாஸ் குறித்து இளங்கோவன் பொறுப்பற்றத்தனமாக கருத்துத் தெரிவித்திருப்பதுகண்டிக்கத்தக்கது. பா.ம.க.வினர் பொறு மையாக இருப்பதால் அவர்களைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்.
இளங்கோவன் ஏன் இப்படிப் பேசுகிறார் என்று தெரியவில்லை. ஆணவமாக பேசியுள்ள இளங்கோவனை பா.ம.க.வன்மையாகக் கண்டிக்கிறது.












Click it and Unblock the Notifications