தைவானில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
தைபே (தைவான்):
தைவானில் வெள்ளிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச்சேதமோ, பெரிய அளவில் பொருட்சேதமோஏற்படவில்லை.
தைவான் மத்திய பூகம்ப ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், தைவானில் அதிகாலை 5.5. என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. திடீரென்றுஏற்பட்ட இந்த நிலநடுக்கம் தைவானின் வடமேற்குப் பகுதியில் உணரப்பட்டது.
இருப்பினும், மிகப்பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிய வந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
தைவான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியாகும். கடந்த 1999 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7.6 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்டநிலநடுக்கத்தில் 2,400 பேர் கொல்லப்பட்டனர். 50,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications