நான் புலனாய்வு அதிகாரி அல்ல: கருணாநிதி
திருச்சி:
முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் மீதான ஊழல் வழக்குகள் குறித்து நடவடிக்கைகள் எடுக்கவேண்டியது எனது கடமையல்ல. நான் அது புலனாய்வுத் துறையினரின் கடமை. நான் புலனாய்வுத் துறையில்பணிபுரியவில்லை என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா, ஊழல் வழக்குகளில் முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன் மேல் ஏன்எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்துள்ளார். இது குறித்து நிருபர்கள் கேட்டபோது கருணாநிதி கூறியதாவது:
கிருஷ்ணன் மீதான வழக்குகள் விசாரணை கட்டத்தில்தான் உள்ளன. அவர் மேல் குற்ற்சசாட்டு பதிவுசெய்யப்பட்டால் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இது எனது பணியல்ல. இது புலன் விசாரணைத்துறையினரின் பணி. தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் புத்தர்சிலைகளை உடைப்பதாக கூறியிருப்பது வருந்தத்தக்கது. கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications