இஸ்ரேல் வீரர்கள் தாக்கியதில் 4 பாலஸ்தீனியர்கள் பலி
ஜெருசலேம்:
மேற்குக் கடற்கரை மற்றும் காசாவில் நடந்த சண்டையில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுகுறித்து பாலஸ்தீன மருத்து மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமல்லா அருகே உள்ள அல் ப்ரீச்சில் பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கிடையே சனிக்கிழமை காலை கடும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் 9 வயது சிறுவன் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். அவர் பெயர் ஓபாய் தார்ராஜ். இவர், இருதரப்பினருக்கும் இடையேமோதல் நடந்த போது இவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருந்தார்.
வெள்ளிக்கிழமை மாலை ராமல்லாவில் தொழுகை நடந்த பின் இஸ்ரேல் ராணுவ வீரர்கள், அங்கிருந்த பாலஸ்தீனர்களை நோக்கித் துப்பாக்கியால்சுட்டனர். இதில் மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதல் குறித்து, பாலஸ்தீன அதிபர் யாசர் அராபத், இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.
யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த செப்டம்பர் மாதம் முதல்மோதல் நடந்து வருகிறது. மோதலில் இரு தரப்பையும் சேர்த்து நூற்றுக்கணக்கானோர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..
யு.என்.ஐ.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications