இந்திய ராணுவ ஒதுக்கீடு: பாகிஸ்தான் மிரட்சி
இஸ்லாமாபாத்:
இந்திய ராணுவத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பாகிஸ்தான் ஆராய்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவரான மேஜர் ஜெனரல் ரஸீத் குரோஸி, இந்தியராணுவத்தின் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதை அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை முடிந்த பின் இது தொடர்பான முடிவுஎடுக்கப்படும்.
இந்தியாவின் ராணுவ ஒதுக்கீடு எவ்வாறு பாகிஸ்தானை பாதிக்கும் என்பது பற்றியும், இப்பிராந்தியத்தில் பாகிஸ்தானின் ராணுவ பலத்தை நிலைநிறுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
காஷ்மீரில் சண்டை நிறுத்தம் அறிவித்துள்ள நிலையில், ராணுவ ஒதுக்கீட்டை இந்தியா அதிகரித்திருப்பது, அந்நாடு தனது பலத்தை அதிகரித்துக் கொள்ளமேற்கொண்டுள்ள நடவடிக்கை என கூறலாம்.
இந்தியாவின் இந்த நடவடிக்கையிலிருந்து இப்பிராந்தியத்தில் அமைதியின்மை நிலைக்கும் காஷ்மீர் பிரச்சனை தீராததற்கும் காரணம் யார் என்பதை உலகம்அறிந்து கொள்ளும் என எதிர்பார்க்கிறோம்.
கடந்த 18 மாத காலமாக காஷ்மீர் பிரச்சனை குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க முயன்று வருவதோடு, இங்கு அமைதி நிலவ பல்வேறுநடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
பாகிஸ்தான் வீரர்களின் எண்ணிக்கையை எல்லைப்பகுதியில் குறைத்து அமைதி தீர்விற்கு முயன்று வருகிறது. பாகிஸ்தானின் இத்தகைய முயற்சிகளுக்கு இந்தியாஒத்துழைப்பு அளிக்காததோடு, காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு காண அனைத்து கட்சி ஹூரியத் தலைவர்கள் பாகிஸ்தான் வர அனுமதி தரவும் மறுத்துவருகிறது.
பாகிஸ்தானிய ஜிகாதி அமைப்புகள் உள்நாட்டில் சட்ட ஒழுங்கை மீறியதால் தான் அவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
ஐ.ஏ.என்.எஸ்
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications