விரைவில் 3 வது அணி குறித்து முடிவு: சுவாமி
மதுரை:
அ.தி.மு.க. தலைமையிலான அணியை விட்டு த.மா.கா. விலகி வந்தால், வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணிஅமைக்க ஜனதா கட்சி தயாராக இருப்பதாக ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை மூப்பனாரை சந்தித்த பின் குறித்து நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நான் மூப்பனாரை மீண்டும் இந்த மாதம் 4-ம் தேதி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறேன். அதன் பின் த.மா.கா தலைமையில் மூன்றாவதுஅணி குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஜனதா கட்சி 30 தொகுதிகளில் போட்டியிடும்.
காங்கிரஸ் கட்சி பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்ததை குறை கூறுகிறது. காங்கிரஸ் கட்சியே விடுதலைப் புலி ஆதரவாளரான திராவிடர் கழகதலைவர் கி.வீரமணியுடன் நட்பு கொண்டிருந்தது.
எக்காரணம் கொண்டும் பாண்டிச்சேரியில் பா.ம.க. ஆட்சி அமையக் கூடாது. அவ்வாறு அமைந்தால் பாண்டிச்சேரி விடுதலைப் புலிகளின் கூடாரமாகிவிடும்.
மத்திய பட்ஜெட் மக்களுக்கு எதிரானது. சர்க்கரை, டீசல், தபால் அட்டை போன்றவற்றின் விலை ஏற்றமும், சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி(பிராவிடன்ட் பன்ட்) போன்றவற்றிற்கு வழங்கப்பட்டு வந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டிருப்பது மத்திய தர மக்களுக்கு பாதிப்பளிக்கக்கூடியது.
மக்களுக்கு எதிரான இந்த பட்ஜெட் குறித்து ஜனதா கட்சி போராட்டம் நடத்தும்.
தலிபான் அரசு ஆப்கானிஸ்தானில் இருக்கும் புத்தர் சிலையை இடிப்பது போன்ற இந்திய எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டால், அந்நாட்டின் மீது அணு ஆயுததாக்குதல் உள்ளிட்ட கடுமாையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்..
இந்த விஷயத்தில் மத்திய அரசு மெளனம் சாதிப்பது வருந்தத்தக்கது.
1991-ம் ஆண்டு, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் பங்கு பெற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் புத்தர் சிலையை இடிக்கக் கூடாது என தலிபான் அரசைகேட்டுக் கொள்ள அவர்களுக்கு எந்த விதமான தார்மீக உரிமையும் கிடையாது என்றார்.
யு.என்.ஐ.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications