கடைசி நேர ஆலோசனையில் ஜெயலலிதா
சென்னை:
தமிழகத்தில் வரும் ஏப்ரலில் நடக்கவுள்ள சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வது மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் சூடு பறக்க இறுதி கட்ட விவாதம் நடந்துவருகிறது.
அதிமுக தலைவர்கள் தம்பிதுரை, ஓ.சி.மணியன், அன்வர் ராஜா மற்றும் சுலோச்சனா சம்பத் ஆகியோர் கம்யூனிஸ்ட்கட்சிகளுடன் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
தற்போது மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்கள் உள்ளன. இருப்பினும்கம்யூனிஸ்ட் 20 க்கும் மேற்பட்ட தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதாவே 12 இடங்கள் மட்டுமே கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.
சிபிஐ பொதுச் செயலாளர் நல்லகண்ணு மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சந்தித்துப் பேசிய பிறகு இறுதி முடிவுஎடுக்கப்படும் என்று தெரிகிறது.
இதே போல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 40 இடங்கள் வேண்டும் என்று கேட்கிறது. ஆனால் ஜெயலலிதாவே10 இடங்களுக்கு மேல் கொடுக்க மாட்டேன் என்கிறார்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு வடதமிழகத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதால் வடதமிழகத்தில் பாமக வுக்கு 15இடங்களுக்கு மேல் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேலும் தமாகா வுக்கு 30 இடங்கள் கொடுப்பதாக ஜெயலலிதா ஒத்துக் கொண்டுள்ளார்.
மூப்பனாரும் டெல்லியில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னாள்நிதியமைச்சரும், தமாகா மூத்த தலைவருமான சிதம்பரம் கூறுகையில் தமிழகத்தில் தமாகா 78 இடங்கள் கேட்கவேண்டும் என்றும் 55 க்கும் குறைவான இடங்களை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் வலியுறுத்திவருகிறார்.
சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள பாண்டிச்சேரியில் பாமகவுக்கு அதிக இடங்கள் கொடுக்கப்படும் என்று தெரிகிறது.இருப்பினும் ஜெயலலிதாவும், பாமக தலைவர் ராமதாசும் இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
யு.என்.ஐ.
-
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications