சரணடைகிறார் அழகிரி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Alagiriவரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வின் வெற்றிக்கு தொண்டர்கள் ஒன்றுபட்டு பாடுபடுமாறு தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவரின் மகனுமானமு.க. அழகிரி கேட்டுக் கொண்டுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கை காரணமாக மு.க. அழகிரியை கட்சியிலிருந்து விலக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன் வரவிருக்கும் தேர்தலில் தான்சுயேட்சையாக போட்டியிட போவதாக அழகிரி அறிவித்தார்.

அதன் பின் அவரது ஆதரவாளர்களால் துவக்கப்பட்ட அழகிரி எழுச்சி பேரவை சட்டசபை தேர்தலில் 34 தொகுதிகளில் போட்டியிட போவதாகஅறிவித்திருந்தது.

அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மன்னிப்பு கேட்ட பின் வர்கள் நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில்அழகிரியுடன் யாரும் தொடர்பு கொள்ள வேண்டாம் என தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் அதிகார பூர்வமாக அறிவித்தார்.

திடீர் திருப்பமாக அழகிரியும் தற்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு தி.மு.க.வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை சாயல்குடியில் முன்னாள் நகர செயலாளர் போஸ் என்பவரின் மகள் திருமண விழாவில் பேசுகையில், ராமநாதபுரத்தில் பிழைப்பதற்காகபலர் மதுரை வந்தனர். எனது ஆதரவால் அவர்கள் இப்போது நல்ல நிலையில் உள்ளனர். பலர் என்னை விட்டு பிரிந்து சென்று விட்டனர்.

எனக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் உடனே கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். என்னால் யாரும் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இனிநான் எதுவும் பேச மாட்டேன். கட்சித் தொண்டர்கள் தி.மு.க. வெற்றிக்கு ஒன்றுபட்டு பாடுபட வேண்டும் என மட்டும் கூறிக் கொள்கிறேன்என்றார்.

அழகிரியின் இந்த முடிவு கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் நிலவி வந்த கோஷ்டி பூசலை முடிவுக்கு கொண்டு வரஎடுத்த முயற்சியில் தி.மு.க. வெற்றி பெற்று விட்டதாகக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+