த.மா.கா, அ.தி.மு.க கூட்டணி: இன்று முடிவு தெரியும்
சென்னை:
தமிழகத்திலும், பாண்டிச்சேரியிலும் வரும் தேர்தலில் அதிமுக, தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையேகூட்டணி ஏற்படுமா என்பது குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்று த.மா.கா வட்டாரங்கள் தெரிவித்தன.
வரும் தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து, அனைத்து கட்சிகளும் இரவு பகல்பாராமல் ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்த நிலையில் அதிமுக, தமாகா கூட்டணி ஏற்படுமா என்பதைஅனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
தொகுதிப் பங்கீடு குறித்து அதிமுக, தமாகா மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.இந்தக் கருத்து வேறுபாடுகள் திங்கள்கிழமைக்குள் சரி செய்யப்படும் என்றும், தேர்தல் கூட்டணி குறித்துதிங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்றும் தமாகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், இதே போல் பாண்டிச்சேரியில் தொகுதிப் பங்கீடு செய்து கொள்வதிலும் இழுபறி நீடிக்கிறது. அதுவும்திங்கள்கிழமைக்குள் நிவர்த்தி செய்யப்படும் என்று தெரிகிறது.
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 35 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 10 இடங்களும் கிடைக்கும்என்று தெரிகிறது. பாண்டிச்சேரியில் காங்கிரஸ், தமாகா இரு கட்சிகளுக்கும் சேர்த்து 15 இடங்கள் கொடுக்கப்படும்என்றும் தெரிகிறது.
முன்னதாக, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமேகொடுக்கத் தீர்மானித்துள்ளார் என்றும், பாண்டிச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 9 இடங்களும், அதிமுகவுக்கு4 இடங்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கொடுக்கத் தீர்மானித்திருப்பதாகவும் செய்திகள்தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, ஹைதராபாத்திலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய ஜெயலலிதா கூறுகையில், தமிழகதேர்தல் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு குறித்து திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என்றார்.
இருப்பினும், தமிழகத்தில் வரும் தேர்தலில் அதிமுக மற்றும் தமாகா, காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி ஏற்படதுக்ளக் பத்திரிக்கை ஆசிரியரும், நாடாளுமன்ற எம்.பி.யுமான சோ தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்றுஞாயிற்றுக்கிழமை தமாகா தலைவர் மூப்பனாரை சந்தித்துக் கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications