பிரச்சனையில் இந்தியத் தூதர்
கொழும்பு:
இலங்கையில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய சத்யாகிரக போராட்டத்தில் கலந்து கொண்டது தொடர்பாகஇந்தியத் துணைத் தூதர் மல்கோத்ரா இலங்கை பத்திரிக்கைகளில் சர்ச்சைக்குரியவராகி விட்டார்.
கண்டி டவுனில் உள்ள இந்திய தூதரகத்தின் துணைத் தூதர் அகேல் மலகோத்ரா. இவர் எஸ்டேட் துறை அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றதையடுத்து, இலங்கையில் வெளியாகும் பத்திரிக்கைகள் அனைத்திலும் இவர்சர்ச்சைக்குரியவராக இடம் பெற்று விட்டார்.
இதையடுத்து இவர் மேல் வெளியுறவுத்துறை அமைச்சகம் விசாரணை நடத்தும் என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து டெய்லி மிரர் பத்திரிக்கை வெளியிட்ட செய்தி:
கண்டி டவுனில் உள்ள ஹாட்டனில் தேயிலைத் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தில் இந்தியத் தூதரக துணை அதிகாரிமல்கோத்ரா கலந்து கொண்டுள்ளார். இவர் மீது நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று வெளியுறவுத்துறை அமைச்சகச் செயலாளர் விஜேஸ்ரிதெரிவித்துள்ளார்.
ஆனால் சிலோன் காங்கிரஸ் தொண்டர்கள் தலைவர் தொண்டமான் கூறுகையில், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் துணை தூதர்மல்கோத்ரா பங்கேற்கவில்லை. அவர் இந்தியர் என்ற முறையில் தமிழர்களாகிய நாங்கள் நடத்திய போராட்டத்தைக் காண மட்டும்தான் வந்திருந்தார்.
நாங்கள் 15 வது நாளாக நடத்திக் கொண்டிருக்கும் போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை. அவர் தனது காரை நாங்கள் போராட்டம் நடந்துகொண்டிருந்த இடத்தில் நிறுத்தி விட்டு, மேடையில் நின்று கொண்டிருந்த என்னிடம் பேச வந்தார். இதைப் பத்திரிக்கைகள் தவறாகப் புரிந்து கொண்டு அவர்போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாகத் தவறாக எழுதி விட்டன என்றார்.
ஆனால் மல்கோத்ரா கூறுகையில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத்தை நான் ஒரு பார்வையாளராக நின்றுதான் பார்த்தேன்.போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
மேலும் சத்தியாகிரகப் போராட்டம் என்பது காந்திய வழி போராட்டமாகும். அதனால் அது எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து பார்க்கவந்தேன். சிலோன் தொண்டர்கள் கட்சி தலைவரைப் பார்த்துப் பேசச் சென்றேன் என்று கூறியுள்ளார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், இந்திய துணைத் தூதர் மல்கோத்ரா, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ 400 சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கைக்குஆதரவு அளிக்கிறார் என்றும் டெய்லி மிரரில் செய்தி வெளியாகியுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications