மூன்றாவது அணிக்கு மூப்பனாரை இழுக்கும் ஜாதி கட்சிகள்
சென்னை:
3-வது அணிக்குத் தலைமை தாங்குங்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு புதிய நீதிக் கட்சித் த லைவர் ஏ.சி.சண்முகம், மக்கள் தமிழ் தேசக்கட்சித் தலைவர் கண்ணப்பனும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அதேசமயம், 3-வது அணி அமைக்க வேண்டாம் என்று திராவிடர் கழகத் த லைவர் கி.வீரமணி, மூப்பனாரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்புகள் கூட்டணி குறித்து ஜெயலலிதா சார்பில் ராமதாஸ் வெளியிட்ட அறிவிப்புக்கு முன் நடந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரை, அவரது ஆழ்வார்ப் பேட் டை வீட்டில் இந்த மூன்று தலைவர்களும்திங்கள்கிழமை தனித் தனியாகச் சந்தித்து இந்த வேண்டு கோளை விடுத்தனர்.
12.30 மணியளவில் மூப்பனாரை, வீரமணி சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் இருவரும் ஆலோசனை நடத்தினர். விவாதம் நடத்திவிட்டு வெளியே வந்த வீரமணி செய்தியாளர்களிடம், மூன்றாவது அணிக்கு அவசரப்பட்டு போய் விட வேண்டாம். அதிமுகதலைமையிலான மதச்சார்பற்ற அணியிலே யே நீடித்திருங்கள் என்று மூப்பனாரைக் கேட்டுக் கொண்டேன். எனது கருத்துக்கள்குறித்து சிந்திப்பதாக மூப்பனாரும் தெரிவித்தார்.
மூன்றாவது அணி அமையாது என்றே பலமாக நம்புகிறேன். அதற்கான வாய்ப்பு வந்து விடக் கூடாது என்பதற்காகவேமூப்பனாரை சந்தித்தேன். 3-வது அணி அமைந்து விடுமோ என்று நான் பயப்படவில் லை. எதற்கும் பயப்படும் எண்ணம்எனக்குக் கிடையாது என்றார்.
வீரமணி சென்றவுடன், ஏ.சி.சண்முகம் வந்தார். மூப்பனாரை சந்தித்து விட்டு சிரித்த முகத்துடன் வெளியே வந்த அவர்செய்தியாளர்க ளைச் சந்தித்தார். அவர்களிடம், மூன்றாவது அணிக்குத் தலைமை தாங்குங்கள் என மூப்பனாரைக் கேட்டுக்கொண்டேன்.
99 சதவீதம் அவர் 3-வது அணிக்கு வருவார் என்று நம்புகிறேன் என்றார்.
அவர் சென்ற பின் கண்ணப்பன் வந்தார். அவரும் சுமார் 30 நிமிடங்கள் வரை மூப்பனாருடன் பேசினார். பின்னர்செய்தியாளர்களிடம் கூறு கையில், 3-வது அணிக்குத் தலை மை வகிக்க மூப்பனாருக்கு அழைப்பு விடுத்தேன். பரிசீலிப்பதாகஅவர் கூறினார் என்றார்.
இவர்கள் சென்ற பின் மூப்பனார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம் செய்தியாளர்கள் கேள்விக் கணைகளைத் தொடுத்தபோது, வழக்கம் போல ஓரிரு வார்த்தைகளில் பதிலளித்தார். தொடர்ந்து ஆலோச னை செய்து கொண்டிருக்கிறேன். விரைவில்முடிவு தெரிவிப்பேன் என்றார்.
மூப்பனார் யோசித்துக் கொண்டும், ஆலோசித்துக் கொண்டும் இருக்க அவரை கூட்டணியில் சேர்ப்பதில்லை என ஜெயலலிதாமுடிவு செய்துவிட்டார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications