மீண்டும் கிரிக்கெட் ஆடும் வாய்ப்பில்லை: ஜடேஜா

Subscribe to Oneindia Tamil

மும்பை:

மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட்டதாக ஜடேஜாவுக்கு 5 ஆண்டு காலம் கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தடைவித்திருந்தது. அவர் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பில்லை என கூறியுள்ளார்.

இது குறித்து ஜடேஜா நிருபர்களிடம் கூறுகையில், 5 ஆண்டு நான் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் மீண்டும் கிரிக்கெட்விளையாடுவதற்கு மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் சொந்த வாழ்க்கை குறித்து விமர்சனம் செய்வது தவறானது. இளம் விளையாட்டு வீரர்களின் சொந்த வாழக்கையை விளையாட்டுடன்சம்பந்தப்படுத்தி பத்திரிக்கையாளர்கள் எழுதுவது கண்டிக்கத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் சவுரவ் கங்கூலி, தென்னிந்திய நடிகை நக்மாவுடன் உள்ள நட்புறவு காரணத்தால்தான் சரியாக விளையாடாதற்குகாரணம் என கூறப்பட்டது. அந்த கருத்து தவறு என சவுரவ் கூறியிருக்கிறார். இதை நான் ஆமோதிக்கிறேன்

நக்மாவுடன், சவுரவுக்கு இருக்கும் நட்பு அவருடைய அணித் தலைவர் பதிவியுடன் சம்பந்தப்படுத்தப் படுத்தி பேசப்படக் கூடாது. இது போன்ற செய்திகள்விளையாட்டு வீர்ரகளின் மன நிலையை பாதித்து அவர்கள் நல்ல முறையில் விளையாட முடியாமல் செய்யும்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இப்போது விளையாடும் வீரர்கள் திறமை குறித்து குறை கூறக் கூடாது. இப்போது விளையாடி வரும் ஆட்டக்காரர்கள்ஒரு ஆட்டத்தில் சரியாக விளையாடவிட்டால் கூட அணியில் இடம் பெறாமல் போய்விடும் அபாயம் இருக்கும் போது இது போன்ற விமர்சனங்களைமேலும் பாதிக்கும்.

தற்போது ஆஸ்திரேலியாவுடன் ஆடி வரும் இந்திய கிரிக்கெட் அணியில் சுழல் பந்து வீச்சாளராக ராகுல் சாங்வியை சேர்த்தது நியாயமானதல்ல. சென்றமுறை நடந்த டெஸ்ட் தொடரில் சுனில் ஜோஷி சிறப்ாக பந்து வீசினார். சிறப்பாக பேட்டிங்கும் செய்தார். அவரை நீக்கியது தவறானது.

அணியின் ஒற்றுமை தான் ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து வெற்றி பெற காரணம். நம்மிடையே ஒற்றுமை இல்லாத வரை நாம் வெற்றி பெறுவதுசாத்தியமல்ல.

தேர்வாளர்கள் இளம் வீரர்களுக்கு அவர்கள் திறமையை நிரூபிக்க வாய்ப்பளிப்பதில்லை. இது போல் இளம் வீரர்களுக்கு மிகக் குறைந்த வாய்ப்பு அளிப்பதுஇந்திய அணயின் எதிர்கால வளர்சிக்கு உதவாது என்றார்.

ஜடேஜா மீதான மேட்ச் ஃபிக்சிங் குற்றசச்சாட்டு மீதான தீர்ப்பு இந்த மாதம் 29-ம் தேதி தெரிய வரும். அதன் பின்னரே எதிர்கால நடவடிக்கை பற்றிஎந்த விதமான இறுதி முடிவெடுப்பேன் என்றார்.

யு.என்.ஐ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+