அரசியல் கட்சிகளை மிரட்டும் சாதிக் கட்சிகள்
இந்த மாதத் துவக்கத்தில் இருந்தே பல அரசியல் கட்சிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு சாதிச் சங்கங்களும்,குறிப்பிட்ட சில இயக்கங்களும் மாநாடு, பேரணி, ஊர்வலம் என களமிறங்கியுள்ளன.
சாதி அடிப்படையில் கோரிக்கை வைத்து அரசியல் கட்சிகளை ஓட்டுக்காக மிரட்டி, வாக்குறுதிகளில் அதனைச்சேர்ந்து ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்தையும் நிறைவேற்றிக் கொள்ள இந்தச் சங்கங்கள் துடிக்கின்றன.
அரசியில் கட்சிகளாக மாறி விட்ட பல சங்கங்கள், சென்னையை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளன.சாதிக்கு ஒரு சங்கமாக மட்டுமல்ல, ஒரே ஜாதிக்குப் பல சங்கங்கள் இருந்து வருகின்றன.
குறிப்பாக நாடர் சமுகத்தில், நாடார் முன்னேற்ற சங்கம், நாடார் மகாஜன சங்கம் என்றும், நாடார் பேரவை, நாடார்இளைஞர் பேரவை, அகில இந்திய நாடார் போன்றவையும் உண்டு. சாதி அடிப்படையில் கூட ஒற்றுமை இல்லாதசங்கங்கள் நிறையவே உள்ளன.
இதே போன்று கவுண்டர் இனத்தில், கவுண்டர் பேரவை, கொங்கு வேளாளக் கவுண்டர்கள் சங்கம் என 3 பிரிவாகச்செயல்பட்டு வருகின்றன. நாயுடு இனத்தில், கம்மாவர் மாகஜன சங்கம், தமிழ்நாடு தெலுங்கு சம்மேளனம்,கம்மாவர் இளைஞர் பேரவை என பல பிரிவுகள் இருக்கின்றன. இப்போது அரசியல் கட்சிகளைச் சார்ந்தசங்கங்கள், அரசியல் சாராத சங்கங்கள் என இவை செயல்பட்டு வருகின்றன.
ஒரே சாதியில் உள்ள பல சங்கங்கள், இரு அணியிலும் ஆதரவு தெரிவித்து இரு அணிகளையும் தக்க வைத்துக்கொள்ள முயன்று வருகின்றன. இந்த நிலையில், அரசியல் கட்சிகளும் இவற்றை அலட்சியப்படுத்தாமல், ஆதரவுதானே, சீட் கேட்கவில்லையே என சந்தோஷமடைந்துள்ளன.
முதலில் அரசியல் சாயம் பூசிக் கொண்ட கட்சிகளை தி.மு.க அணி எதிர்த்தாலும், இப்போது எந்தக் கட்சியாகஇருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்றுக் கொள்ளும் என்ற நிலைக்கு வந்துள்ளன.
அதேசமயம், சில ஜாதிக் கட்சிகள் ""தன்மானம் கருதி இரண்டாவது அணிக்குப் போகமல் 3வது அணி ஒன்றையும்சிறிய அளவில் திட்டமிட்டு வருகின்றன. தமிழகத்தில் 3வது அணி உருவாகுமானால், அதில் பெரும்பாலனவைசாதி அடிப்படையில் உருவான கட்சியாக இருக்கும்.
தேர்தலுக்குப் பின்னர் நீர்க்குமிழ் போன்று தோன்றிய பல சாதிக் கட்சிகள் காணமல் போவது உறுதி என்பதுஇப்போதே நிரூபணமாகியுள்ளன. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தோன்றிய பல சாதி அடிப்படையிலானகட்சிகளின் பெயர் மங்கிப் போய் இருப்பது உண்மை.
இக்கட்சிகளில் சிறிதளவு தலைதூக்கிக் கொண்டிருப்பது புதிய நீதிக் கட்சிதான். பத்திரிக்கைத் தொடர்பு, மீடியாக்கவர்ச்சி என பல வகைகளில் தன்னை விளம்பரப்படுத்தி, எல்லோருடைய நினைவிலும் சிறிதளவு இடம்பிடித்திருக்கிறது இக் கட்சி. இதன் தலைவர் ஏ.சி சண்முகம், 3 வது அணிக்காக இப்போது மூப்பனாருடன்பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளார்.
என்னதான் இருந்தாலும் 3 வது அணி தோற்கும் என்ற சூழ்நிலை, தமிழகத்தில் புதிதல்ல. 3 வது அணி என்பதுகுறிப்பிட்ட சில இடங்களை வேண்டுமானால் பெறலாமே ஒழிய, இரு அணிகள் தான் முன்னணியில் இருக்கும்என்பது தமிழக மக்கள் காலம் காலமாக அளித்து வரும் தீர்ப்பாகும்.
எது எப்படிப் போனாலும், உதிரிக் கட்சிகள், சிறு சிறு சங்கங்கள், இயக்கங்கள், ஓட்டு வங்கிகள் எனப் பிரித்தாலும்இவற்றால் பெரிதாக எந்த மாற்றம் நிகழ்ந்து விடப் போவதில்லை. இவைகள் நடத்தும் ஊர்வலம், பேரணி,ஆலோசனைக் கூட்டம், பொதுக் கூட்டம் எல்லாம் வீண் கோஷமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
அதேசமயம், சில ""தலைகள் அப்பாவி மக்களின் பொருளாதாரத்தைப் பிடுங்கி, தேவையற்ற ஊர்வலங்களைநடத்தி, போக்குவரத்திற்கு இடையூறாக்கி, பொதுமக்களின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனஎன்பது யாருக்கும் புரியப் போவதில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications