காஷ்மீரில் தற்கொலை படை தாக்கி 4 வீரர்கள் பலி
ஸ்ரீநகர்:
ஜம்மூ - காஷ்மீரில் ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலைநடத்திய தாக்குதலில் ஒரு இளநிலை ராணுவ அதிகாரி உட்பட நான்கு ராணுவ வீரர்கள்கொல்லபட்டனர். ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கையில், ஃபியாதீன் தற்கொலைப்படையினர் ஜம்மு - காஷ்மீர், பாராமுலாவில் இருக்கும் ராணுவ முகாம் மீதுஞாயிற்றுக்கிழமை அதிகாலை தாக்குதல் நடத்தினர். இரண்டு தீவிரவாதிகள் ராணுவமுகாமுக்குள் நுழையும் முன் கை எறிகுண்டுகளை மூலமும் ராக்கெட் குண்டுகள்மூலமும் தாக்குதல் நடத்தினர்.
பின்னர் அவர்கள் ராணுவ முகாமுக்குள் புகுந்து சரமாரியாக கண்மூடித்தனமாகசுட்டனர். இதில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 ராணுவ வீரர்கள்காயமடைந்தனர்.
ராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதில் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பல மணிநேரம் தொடர்ந்துசண்டை நடந்தது.
இந்த தாக்குதலுக்கு லக்ஷர்-இ-தைபா பொறுப்பேற்றுள்ளது. ராணுவ வீரர்களும்,புறக்காவல் படையினரும் தாக்குதல் நடந்த பகுதியைச் சுற்றிலும் தேடுதல் பணியில்ஈடுபட்டுள்ளனர் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து பாராமுலாவில் ராணுவ முகாமுக்கு அருகே இருக்கும்விளையாட்டு அரங்க பகுதியில் தங்கியிருக்கும் மக்கள் கூறுகையில், அதிகாலையில்மிகப் பெரிய வெடிசத்தமும், துப்பாக்கி வெடிக்கும் சத்தமும் கேட்டுத்தான் நாங்கள்கண் விழித்தோம் என்றனர்.
இந்த தற்கொலை படை தாக்குதல் சென்ற வெள்ளிக்கிழமை, ரஜோரி மாவட்டத்தில்போலீசார் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடந்த தாக்குதலில் 17 போலீசார்கொன்ற பின்பு நடத்தப்பட்டுள்ளது.
அதற்கு முன்பு வடக்கு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒரு ராணுவகர்னல் கொல்லப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications