ரஷ்ய தூதரகத்தை குழி தோண்டி வேவு பார்த்த அமெரிக்கா
வாஷிங்டன்:
அமெரிக்காவில் உள்ள ரஷ்ய தூதரகத்தின் செயல்பாடுகளை தூதரக கட்டிடத்தின் அடியில் சுரங்கப்பாதை அமைத்து அமெரிக்கா பல வருடங்களாக வேவுபார்த்து வந்துள்ளது என்ற திடுக்கிடும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
ஆனால் அமெரிக்க துணை அதிபர் டிக் செனாய் இதுகுறித்து பதில் எதுவும் கூற மறுத்தார். சி.பி.எஸ் தொலைக்காட்சியில் அவர்இதுகுறித்துக் கூறுகையில், ரஷ்யா தூதரகத்தின் கீழ் சுரங்கம் அமைத்து தூதரக நடவடிக்கைகளை வேவு பார்க்கிறதுஅமெரிக்கா என்று குற்றச்சாட்டு குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது என்றார்.
ஆனால் நியுயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் கடந்த வாரம் வெளியான செய்தியில், ராபர்ட் பிலிப் ஹான்சன்என்பவர் ரஷ்ய தூதரக செயல்பாடுகளை வேவு பார்த்தது தொடர்பாகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு ஏஜன்சியும், அமெரிக்க புலனாய்வு சம்மேளனமும் (எப்.பி.ஐ.) சேர்ந்து இந்த நடவடிக்கையில்பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகின்றன. இவர்களின் ஏஜன்டாக ராபர்ட் பிலிப் செயல்பட்டு வந்துள்ளார் என்றுசெய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் எப்.பி.ஐ.செய்தித்தொடர்பாளர் இதுகுறித்து பதில் எதுவும் கூற மறுத்தார். அதே போல் வெள்ளைமாளிகையும் பதில் கூற மறுத்தன.
அமெரிக்காவில் 1970 ம் ஆண்டில் ரஷ்ய தூதரகம் அமைக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் இங்கு நடக்கும்செயல்களை வேவு பார்க்க ஆரம்பித்தது அமெரிக்கா என்று பத்திரிக்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கண்டனம்:
இதற்கிடையே ரஷ்ய தூதரகத்தின் அடியில் சுரங்கம் அமைத்து அமெரிக்கா வேவு பார்ப்பது குறித்து ரஷ்யா கடும்கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இவ்விஷயம் குறித்து அமெரிக்கா மீது ரஷ்யா கண்டனம் தெரிவிக்கிறது. அமெரிக்கா வேவு பார்க்கும் விஷயம்குறித்து ரஷ்யாவிற்கு விளக்கம் கூற வேண்டும்.
ரஷ்ய தூதரகத்தின் அடியில் சுரங்கப்பாதை இருப்பது உண்மை என்று நிருபிக்கும் பட்சத்தில் அமெரிக்கா இதற்குப்பதில் கூறியே ஆக வேண்டும். ஏனெனில் இது சர்வதேச சட்டத்தையே மீறுவது போன்ற செயலாகும் என்றுகூறிள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications