இலங்கை ராணுவ வீரர்களுக்கு வயாக்ரா
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் சண்டையிட்டு வரும் ராணுவ வீரர்களுக்குத் தோன்றும் செக்ஸ் தொடர்பான பிரச்சனைகளை சமாளிக்க வயாக்ராமாத்திரைகளை வழங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
முதலில் பரிசோதனைக்காக சில ராணுவ வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு வயாக்ரா மாத்திரைகள் வழங்கப்படும். பரிசோதனை வெற்றிபெற்றால் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வயாக்ரா மாத்திரைகள் கொடுக்கப்படும் என்றும் இலங்கை அரசு கூறியுள்ளது.
இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் வெளியிட்ட செய்தி அறிக்கை:
புலிகளுடன் மோதும் அனைத்து ராணுவ வீரர்களுக்கும் மருத்துவ சிகிச்சைக்கான அனைத்து உதவிகளும் செய்து கொடுக்கப்படும். மேலும் முதுகுத்தண்டில்பிரச்சனை உள்ள ராணுவ வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படும்.
தற்போது சில ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுத்து வயாக்ரா மாத்திரைகளைக் கொடுத்துப் பரிசோதித்து வருகிறோம். பரிசோதனை முடிந்த பின்திருமணமான அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வயாக்ரா மாத்திரைகள் கொடுக்கப்படும்.
பிட்ஸர் என்ற மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனம் முதலில் ராணுவ வீரர்களுக்கு கொடுக்கும் வயாக்ரா மாத்திரைகளை இலவசமாகக்கொடுக்க ஒத்துக் கொண்டுள்ளது.
புலிகளுடன் மிகக் கடுமையாகச் சண்டையிட்ட பின் ராணுவ வீரர்களால் செக்ஸ் வாழ்க்கையில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. அவர்களுக்குப் பலபிரச்சனைகள் ஏற்படுகிறது.
மொத்தம் உள்ள ராணுவ வீரர்களில் 8 ல் ஒரு பங்கு ராணுவ வீரர்கள், புலிகளால் தாக்கப்பட்டு காயம் அடைந்தவர்கள். அதாவது 1, 700 ராணுவவீரர்கள் ஒரு காலையோ அல்லது இரண்டு கால்களையுமோ இழந்து விட்டவர்கள்.
இவர்களுக்கு வயாக்ரா மாத்திரைகளைக் கொடுத்து அவர்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் எவ்விதப் பிரச்சனையும் ஏற்படுகிறதா என்று பார்ப்போம்.இதற்காக முதலில் திருமணமான சில ராணுவ வீரர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வயாக்ரா மாத்திரைகளைக் கொடுப்போம்.
அதற்குப்பிறகு ராணுவ வீரர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் அவர்களுக்கு வயாக்ரா மாத்திரைகள் கொடுக்கப்படும். இது அவர்களது செக்ஸ்வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்பே இலங்கை ராணுவ வீரர்களுக்கு வயாக்ரா மாத்திரைகள் வழங்குவதற்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒருவயாக்ரா மாத்திரை ரூ 650 என்ற விலைக்கு விற்கப்படுகிறது.
முன்னதாக, இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து 18 ஆண்டுகளாகச்சண்டை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications