அதிமுக கூட்டணியில் த.மா.கா சேருமா? சஸ்பென்ஸ் நீடிக்கிறது
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை அதிமுக கூட்டணியில் சேர்ப்பது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திங்கள்கிழமை பிற்பகல் வரை எந்தமுடிவையும் அறிவிக்கவில் லை.
அதிமுக கூட்டணியில் சேருவது குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இன்னும் ஒரு முடிவையும் எடுக்கவில்லை. தொடர்ந்துஆலோசனை, யோசனை என இரு கட்சிகளும் இழுத்துக் கொண் ட வந்ததால், மார்ச் 1ம் தேதிக்குள் இரு கட்சிகளும் கூட்டணியில் சேருவது குறித்துமுடிவெடுக்க வேண்டும் என்று கெடு விதித்து விட்டு ஹைதராபாத்துக்கு வண்டி யேறினார் ஜெயலலிதா.
கெடு குறித்து இரு கட்சிகளும் பெரிதாக எடுத்துக் கொண்டது போலத் தெரியவில் லை. இருந்தாலும் தொடர்ந்து தினசரி தீவிர ஆலோச னைகளில் இருகட்சிகளும் ஈடுபட்டன.
இந்த நிலையில், ஜெயலலிதா ஹைதராபாத்திலிருந்து மார்ச் 1ம் தேதி திரும்பவில்லை. மாறாக 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைதான் அவர் சென் னைதிரும்பினார். 5-ம் தேதி அவர் கூட்டணி குறித்து இறுதி முடிவு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும் திங்கள்கிழமை பிற்பகல் வரை எந்த முடிவையும் ஜெயலலிதா அறிவிக்கவில்லை. அ னேகமாக செவ்வாய்க்கிழமைதான் அவர் தனதுமுடிவை அறிவிப்பார் என அதிமுக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகத்தில் இது குறித்துத் தொடர்பு கொண்டு கேட்டபோது, கூட்டணி குறித்து ஜெயலலிதா இதுவ ரை எந்த முடிவும் எடுக்கவில் லை என்று தெரிவிக்கப்பட்டது.
கூட்டணிக் கட்சிகளான பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய தேசிய லீக் ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தியபிறகே தனது முடிவை ஜெயலலிதா அறிவிப்பார் எனவும் அதிமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வெறிச்சோடிய அதிமுக அலுவலகம்:
அதிமுக தலைமை அலுவலகம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. தேர்தல் கூட்டணி குறித்து அனைத்து அரசியல் கட்சிகளும் அலைபாய்ந்து கொண்டிருக்கும்வேளையில் அதிமுக அலுவலகத்தில் அந்தக் களேபர மே காணப்படவில்லை.
ஒரு சில தொண்டர்களே அலுவலகத்தில் காணப்படுகின்றனர். பெரிய மற்றும் இரண்டாம் மட்ட தலைவர்களைப் பார்க்க முடியவில்லை. ஜெயலலிதாபெரும்பாலும் அறிக்கைகள் மூலமே தனது அரசியலை நடத்திக் கொண்டிருப்பதால் அதிமுக அலுவலகத்தில் ஆட்களின் அளவு குறைவாகவேகாணப்படுகிறது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications