குஜராத் மக்களுக்கு குடியுரிமை: கனடா திட்டம்
டொரான்டோ:
பூகம்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள குஜராத் மாநிலத்திலிருந்து கனடாவிற்குக் குடிபெயர விண்ணப்பித்துள்ள 1,000 பேரின் விண்ணப்பப் படிவங்கள் விரைவில்பரிசீலிக்கப்படும் என்று கனடா அறிவித்துள்ளது.
இதுகுறித்து கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கார்கியானிஸ் கூறியதாவது:
இந்தியாவிலிருந்து கனடாவிற்கு குடிபெயர பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்திலிருந்து 1000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதைஇந்தியாவிற்கான கனடா தூதர் பீட்டர் சுதர்லான்ட் பரிசீலித்து வருகிறார்.
நான் கடந்த வாரம் டெல்லி மற்றும் குஜராத் ஆகிய நகரங்களுக்குச் சென்றிருந்தேன்.
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கனடாவிற்கு வருவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று கனடா ஏற்கனவேஅறிவித்திருந்தது.
மார்ச் மாத இறுதியிலோ அல்லது ஏப்ரல் மாதத் தொடக்கத்திலோ குஜராத்திலிருந்து கனடாவிற்கு குடிபெயர விண்ணப்பித்துள்ளவர்களுக்கு விசா வழங்கஅனைத்து ஏற்பாடுகளையும் கனடா செய்து கொடுக்கும். குஜராத்திலிருந்து விண்ணபித்துள்ள 1,000 பேருக்கும் கனடாவில் குடியுரிமை அளிக்கப்படும்.
குஜராத் மாநிலத்தில் பூகம்பத்தால் தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இழந்து தவிக்கும் இரண்டு பச்சிளங் குழந்தைகளுக்கு முதலில் விசாவழங்க ஏற்பாடு செய்யப்படும்.
முன்னதாக, கனடா பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில மக்களுக்காக 10 மில்லியன் டாலர்கள் கொடுத்துள்ளது என்பது அனைவருக்கும்தெரியும்.
குஜராத்துக்கு மேலும் நிவாரண நிதி வழங்குவது குறித்து கனடா பரிசீலிக்கும் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications