மணக்கோலம் காண வந்தவர்கள் பிணக்கோலம்

Subscribe to Oneindia Tamil

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரிக்கரை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த இரண்டு வாலிபர்கள், லாரி மோதியதில் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர்.

இருவரும் சென்னை பெரம்பூரைச் சேர்ந்தவர்கள்.

விபத்து குறித்து போலீசார் கூறுகையில், சென்னையைச் சேர்ந்த வாலிபர்கள் இரண்டு பேரும் காஞ்சிபுரத்தில் உள்ள திருமணம் ஒன்றில் கலந்துகொள்வதற்காகச் சென்ற போது பலியானார்கள். அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சை முந்திச் செல்லமுயன்ற போது எதிரே வந்த லாரி மோதியதில் பலியானார்கள்.

அவர்களது பெயர், இதர விவரங்கள் எதுவும் தெரியவில்லை.

திடீரென்று ஏற்பட்ட இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் சய்த 5 பேருக்குக் காயம் ஏற்பட்டது.


காயமடைந்தவர்கள் அனைவரும் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றனர்.

முன்னதாக, இந்த விபத்தையடுத்து சென்னை, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சில மணி நேரங்கள் பாதிக்கப்பட்டது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+