தென் மாவட்டங்களில் திமுகவுக்கு செல்வாக்கு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் மாவட்டங்களில் திமுக அணிக்கு நல்ல செல்வாக்கு உள்ளது. சட்டசபை தேர்தலில் அங்கு அதிமுக தோல்வியை சந்திக்கும் என்று புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 24 ம் தேதி எங்களது கட்சியின் கூட்டம் மதுரையில் நடக்கிறது. அங்கு தேர்தல் பணி குறித்துவிவாதிக்கவுள்ளோம். தொகுதிப் பங்கீடு குறித்துப் பிரச்சனையில்லை.
திமுக அணியில் எந்தக் கட்சியையும் சேர்க்கும் அதிகாரம் முதல்வர் கருணாநிதிக்கு உண்டு. விடுதலை சிறுத்தைகள் அமைப்பையும் நாங்கள் எதிர்க்கமாட்டோம்.
தென் மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் செய்த போது திமுக ஆதரவலையைக் கண்டேன். மேலும் அதிமுக வுக்கு எதிராகவும் மக்கள் உள்ளனர்.கூட்டணியில் கண்ணப்பன் கட்சியையும், கருணாநிதி சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.












Click it and Unblock the Notifications