விரைவில் முடிவெடுங்கள்: த.மா.கா.வுக்கு ஜெ.கோரிக்கை
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, த.மா.கா.வும், காங்கிரசும் கூட்டணி குறித்து விரைவில் முடிவெடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் எந்த காலக்கெடுவும் விதிக்கவில்லை.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில், பாண்டிச்சேரியில் பா.ம.க.வுடன் பதவி பங்கீடு என்பதை ஒப்புக்கொள்ள முடியாது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம் நபி ஆசாத் கூறியது பற்றி நான் எந்த விதமான கருத்தும் கூற விரும்பவில்லை.
கூட்டணி குறித்து த.மா.கா. தலைவருடன் பேச்ச வார்த்தை நடத்தி வருகிறேன். தமிழகத்தில் மூன்றாவது அணி சாத்தியமானது அல்ல.
காங்கிரசை விட்டு வருமாறு நான் மூப்பனாரிடம் கூறியதாக பத்திரிக்கைகளில் வந்த செய்திகள் தவறானவை. எங்கள் கட்சி அது போன்ற செய்கைகளில்ஒரு போதும் ஈடுபடாது.
த.மா.கா.வுக்கும், காங்கிரசுக்கும் சேர்த்து 45 தொகுதிகள் கொடுக்கப்படும். அவர்கள் தங்களுக்குள் அதை பிரித்துக் கொள்ள வேண்டும். அதுஅவர்கள் பொறுப்பு.
மதசார்பற்ற கூட்டணியில், கூட்டணி குறித்த உடன்பாடு ஏற்படுவதில் தாமதமாவதற்கு மற்ற கட்சிகள் தான் காரணம். இதன் காரணமாக கட்சிதொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். இப்போது கூட்டணி குறித்து முடிவுகள் எடுக்கப்பட்டு வருவதால் மீண்டும் புத்துணர்சி பெற்றுள்ளனர்.
த.மா.கா.வுடனான தேர்தல் கூட்டணி குறித்த கதவுகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன என கூறிய தி.மு.க.தலைவர் கருணாநிதி, மீண்டும் த.மா.கா.வைதி.மு.க. கூட்டணிக்கு அழைப்பது அவருக்கு ஸ்திரத்தன்மை இல்லை என்பதை காட்டுகிறது. அது தேர்தல் குறித்து அவர் மனதில் எழுந்துள்ள அச்சத்தையும்காட்டுகிறது.
பாண்டிச்சேரியில் இரண்டரை ஆண்டு ஆட்சி என்ற சுழற்சி முறை ஆட்சியில் எந்த விதமான மறு பேச்சுக்கே இடமில்லை.
பா.ம.கா.வுக்கு தமிழகத்தில் 27 தொகுதிகளும், பாண்டிச்சேரியில் 10 தொகுதிகளும் அக் கட்சிக்கு இருக்கம் வெற்றி வாய்ப்பின் அடிப்படையை கருத்தில்கொண்டுதான் ஒதுக்கப்பட்டது.
பாண்டிச்சேரியில் முதல்வர் பதவியை தியாகம் செய்ய முடியாது என காங்கிரஸ் கூறுகிறது. 1996-ம் ஆண்டுக்கு பின் பாண்டிச்சேரியில் காங்கிரசால் ஆட்சிஅமைக்க முடியவில்லை.
தி.மு.க., த.மா.கா. உறவு முறிந்த பின்புதான் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. அதிலும் த.மா.கா. ஆட்சியில் பங்கு வகிக்க அ.தி.மு.க. வெளியில் இருந்துஆதரவு தருவதால்தான் அதுவும் சாத்தியமானது.
பாண்டிச்சேரியில் எந்த கட்சியும் முதல்வர் பதவி வேண்டும் என உரிமை கோர முடியாது.
தேர்தல் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தை குறித்து பத்திரிக்கைகளில் பல தவறான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது மதசார்பற்ற கூட்டணியில்சுமுகமாக நடந்து வரும் பேச்சு வார்த்தையை பாதிக்கும் நோக்கத்தில் பரப்பப்படும் தவறான கருத்து.
கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீடு முடிவடைந்த பின், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து முடிவெடுக்கப்படும். மற்ற கூட்டணிகட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கப்படும் என இப்போது கூற இயலாது என்றார்.
யு.என்.ஐ.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications