எப்போது முடிவெடுப்பார் மூப்பனார்?
சென்னை:
மூப்பனாரின் கடைசிக் கதவும் அடைக்கப்பட்டு விட்டது. புதுவைஆட்சியில் ஆளுக்கு பாதி எனவும், தமிழக சட்டசபை தேர்தலில் 27 தொகுதிகள்எனவும் பா.ம.க. உடன்பாடு கொண்டுள்ளார் ஜெயலலிதா. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் முக்கிய கோரிக்கையான பாண்டிச்சேரியில் ஆட்சி என்றகோரிக்கைய நிராகரித்து விட்டார் ஜெயலலிதா.
த.மா.கா. பிரதிநிதிகளிடம் பேச்சு நடத்த வருமாறு ஒரு பக்கம் அழைப்பு விடுத்த விட்டு, மறுபக்கம் ராமதாசுடன் உடன்பாடில் கையெழுத்துப் போட்டுதனது வித்தியாசமான செயல்பாட்டை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளார் ஜெயலலிதா.
பா.ம.க.விடம் ஜெயலலிதா உடன்பாடு கொண்டுள்ள நிலையில், மறுபுறம் பா.ம.க.வின் முக்கிய எதிரியான விடுதலை சிறுத்தைகள் கட்சி தி.மு.க. அணியில்இணைந்துள்ளது.
மூப்பனாருடன் மிக நெருக்கமாக இருந்த திருமாவளவன் மூப்பனாரின் தொடர் அமைதியால் வெறுத்து தி.மு.க. பக்கம் வந்துள்ளார்.
ஜெயலலிதா தங்களை ஏமாற்றி விட்டதாகவே காங்கிரஸ் மற்றும் த.மா.கா.வினர் கருதுகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் நீடிக்கவேண்டுமா என்ற கேள்வியில் இரு கட்சித் தலைவர்களும் உள்ளனர்.
இப்போது த.மா.கா. மற்றும் காங்கிரஸ் முன் இரண்டே வாய்ப்புகள்தான் உள்ளன. ஒன்று, பேசாமல் போய் தி.மு.க. அணியில் இணைந்து விடுவது.இரண்டாவது புதிய நீதிக் கட்சி, மக்கள் தமிழ் தேசம் என உதிரிக் கட்சிகளுடன் சேர்ந்து 3-வது அணி காண்பது.
த.மா.கா. வந்தால் மகிழ்ச்சியே என்று திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கருணாநிதி கூறியதை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
மேலும், 3-வது அணி கண்டு எல்லா தொகுதிகளிலும் டெபாசிட் இழப்பதை விட ஏதாவது சில தொகுதிகளில் வெல்வதே நல்லது என்று த.மா.காவில்ஒரு தரப்பினர் நினைக்கின்றனர்.
ஏற்கனவே ப.சிதம்பரம், அழகிரி எம்.எல்.ஏ. உள்பட இரண்டாம் கட்சி தலைவர்களில் ஒரு சிலர் மூப்பனாரின் போக்கு குறித்து அதிருப்தியுடன் உள்ளன.இப்போது ஜெயலலிதா நடந்து கொண்டுள்ள விதம், அவர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது.
இதைக் காரணம் காட்டியே. தி.மு.க. அணிக்கு த.மா.கா. செல்ல வேண்டும் என்பதை மீண்டும் அவர்கள் (இம்முறை உறுதியாக) வலியுறுத்துவார்கள்என்று எதிர்பார்க்கலாம்.
மூப்பனார் இப்போது ஏதாவது செய்தே ஆக வேண்டும். இல்லா விட்டால் 3-வது அணியிலும் கூட அவருக்கு இடமில்லாமல் போனாலும்ஆச்சரியப்படுவதற்கில்லை.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications