பெருகி வரும் சிறுநீரக மோசடி
கோவை:
கோவை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், சிறுநீரகம் (" கிட்னி) மோசடி நடந்து வருகிறது. இந்த மறைமுக மோசடியால் பல அப்பாவிமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து வந்த சில ஏஜெண்டுகள் சேலம், ஈரோடு பகுதிகளில் உள்ள எளிய மக்களிடம் சிறு நீரகத்தை விலைபேசிவந்தனர். இந்த கிட்னி, பெங்களூரில் உள்ள பிரபல மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டது.
வறுமையில் உள்ள மக்களின் பணத் தேவையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இந்த வியாபாரம் திரைமறைவில் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசடியால் பாதிக்கப்பட்ட ஒருவர் போலீசிலும் புகார் செய்திருந்தார். இதே போன்று கோவையில் உள்ள பிரபல மருத்துவமனைகளில் கிட்னிவியாபாரம், மறைகப் பேரமாக நடந்து வருகிறது. சிறுநீரகம் தேவைப்படும் நோயாளிகளிடம், புரோக்கர்கள் மூலம் பேச்சுவார்த்தைநடக்கின்றன. இந்த புரோக்கர்கள், தங்களின் சாதூர்யத்தினால், ஏழை மக்களில் யாருக்குப் பணத் தேவை அதிகமாக இருக்கிறது என்பதை அறிந்துஅவர்களை தங்கள் வசப்படுத்தி விடுகின்றனர்.
பின்னர் சிறுநீரகம் தேவைப்படும் நோயாளியிடம் 50 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்ச ரூபாய் வரை பெற்று விடுகின்றனர். இந்தப் பணத்தில் வெறும் 20ஆயிரமோ, 30 ஆயிரம் ரூபாயோ தான் சிறுநீரகம் தானம் கொடுத்தவர்களுக்குச் சென்றடைகிறது.
ஆனால், உண்மையில் பெறப்பட்ட தொகை, சிறுநீரகத் தானம் தந்தவருக்கு கிடைப்பதில்லை. இவ்வாறு நடக்கும் திரைமறைவு வேலைக்கு சிலமருத்துவமனைகளும் கூட ஒத்துழைப்பு அளிக்கின்றன. சிறு நீரகத் தானம் தருவோர் முழுமையாகப் பயன்பெற இந்த மருத்துவமனைகள் எவ்விதமுயற்சியும் மேற்கொள்வதில்லை. இதற்கு புரோக்கர்கள் வழங்கும் கமிஷனும் காரணமாக உள்ளது. எனவே இந்த கிட்னி வியாராத்தில் நடக்கும்மோசடி குறித்து விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
அதோடு, சிறு நீரகத் தானம் செய்வோர் பதிவு செய்து கொள்ளும் வசதியும், தானம் செய்வோருக்கு உரிய தொகை கிடைக்கவும் அரசு ஆவண செய்யவேண்டும். அப்பாவிப் பொதுமக்கள், வறுமையில் வாடும் மக்கள் எவ்விதத்திலும் ஏமாற்றப்படக் கூடாது என்பதே பலரின் ஆதங்கமாகஇருக்கிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications