இலவச மின்சாரம் ரத்து: ஏ.சி.சண்முகம் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யக் கூடாது என்று புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவில் மின்துறையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க மத்திய அரசு நாடு தழுவிய பொதுத் திட்டத்தைக் கொண்டு வரவேண்டும். அதைவிட்டு விட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது.
விவசாயிகளை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கொண்டு வரப்பட்ட இலவச மின்சார திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்யக் கூடாது.
விவசாயிகளிடமிருந்து 50 பைசா வசூலிக்க வேண்டும் என்று வாஜ்பாய், மாநில அரசுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதுஎன்று தனது அறிக்கையில் கூறியுள்ளார் சண்முகம்.












Click it and Unblock the Notifications