விமான நிலையத்தில் திமுக தொண்டர் திருமணம்
சேலம்:
சேலம் விமான நிலைய வரவேற்பு நிகழ்ச்சியில் திமுக தொண்டருக்கு திருமணம் நடத்தி வைத்தார் முதல்வர் கருணாநிதி.
முதல்வர் கருணாநிதி ஒரு நாள் சுற்றுப்பயணமாக சேலம் சென்றிருந்தார். அவருக்கு கமலாபுரம் விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சிக்காக விமான நிலைய வளாகத்தில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக முக்கிய பிரமுகர்கள்,தொண்டர்கள் ஆகியோர் க்யூ வரிசையில் நின்று முதல்வருக்கு பூச்செண்டு அளித்தார்கள்.
அப்போது சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்த தொண்டர் உமாபதி மணமகள் பிரபாவதியுடன் மணக்கோலத்தில் மாலையுடன் விமானநிலையத்துக்கு வந்திருந்தார்.
அவர் முதல்வர் முன்னிலையில் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகக் கூறினார். இதையடுத்து முதல்வர் கருணாநிதி அவரையும், மணப்பெண்ணையும் மேடைக்குஅழைத்துச் சென்று அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணம் முடிந்த பிறகு இருவரும் முதல்வர் கருணாநிதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு சென்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications