மலேசியாவில் படகு கவிழ்ந்ததில் 14 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்:

மலேசியாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள லாங்க்வாய் தீவில் உள்ள கடலில் படகு கவிழ்ந்ததில் அதில் பயணம்செய்த 14 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

அவர்களது சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மலேசியாவில் உள்ள லாங்க்வாய் தீவு அருகேயுள்ள கடலில் 26 க்கும் மேற்பட்டோர் படகில் பயணம் செய்தனர்.அப்போது படகு கவிழ்ந்ததில் 14 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.

நீரில் மூழ்கிய 12 பேர் மீன்பிடிக்கும் படகில் ஏறி தப்பித்து விட்டனர். 14 பேரின் சடலங்களை மீட்கும் பணிதொடர்ந்து நடந்து வருகிறது.

இதுவரை ஒருவர் உடல் கூட கிடைக்கவில்லை. கடலில் கவிழ்ந்த படகில் நேபாளத்தைச் சேர்ந்த 8 பேர்,பாகிஸ்தானைச் சேர்ந்த 8 பேர், தாய்லாந்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் மியான்மரைச் சேர்ந்த 8 பேர் பயணம்செய்தனர்.

இவர்கள் படகில் பயணம் செய்து கொண்டிருந்த போது சூறாவளிக் காற்று ஏற்பட்டதில் இவர்கள் சென்ற படகுகடலில் கவிழ்ந்தது.

தப்பித்தவர்களில் 7 பேர் மியான்மரைச் சேர்ந்தவர்கள். 2 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். தாய்லாந்து மற்றும்நேபாளைச் சேர்ந்தவர்கள் இரண்டு பேர்.

மேலும் படகில் பயணம் செய்து மலேசியாவுக்குள் நுழைய முயன்றவர்கள் அனைவரும் வேலை தேடுவதற்காகசென்றிருக்கலாம் என்றும், அவர்கள் அனுமதியில்லாமல் சென்றிருக்கலாம் என்றும் சந்தேகம் உள்ளதாகப்போலீசார் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+