அதிபரானபின் புஷ்ஷின் முதல் வெளிநாட்டுப் பயணம்
சிகாகோ:
அமெரிக்காவின் 43 வது அதிபர் ஜார்ஜ் ஜூனியர் புஷ், அதிபராகப் பதவியேற்ற பின் முதல்முறையாக ஸ்வீடனில் நடக்கும் அமெரிக்கா மற்றும்ஐரோப்பா இணைந்து நடத்தும் மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார் என்று வெள்ளி மாளிகை செய்திகள் தெரிவிக்கிறது.
வெள்ளைமாளிகை செய்தித் தொடர்பாளர் கோர்டான் ஜான்ட்ரூ இதுகுறித்துக் கூறியதாவது:
ஸ்வீடனில் உள்ள கோடன்பெர்க்கில் அமெரிக்காவும், ஐரோப்பாவும் இணைந்து மாநாடு நடத்துகிறது. இது ஜூன் மாதம் 15 மற்றும் 16 ம்தேதிகளில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் அதிபர் ஜார்ஜ் வில்லியம் ஜூனியர் புஷ் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
முன்னதாக, ஸ்வீடன் செய்திகள் தெரிவிக்கையில், ஐரோப்பாவில் நடக்கும் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜூனியர் புஷ்ஷூக்கு விருந்து அளிக்கப்படும். இந்தவிருந்து மற்றும் மாநாட்டில் 15 ஐரோப்பிய தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications