சைதாப்பேட்டையில் போட்டி? மறுக்கிறார் முதல்வர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் தான் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து போட்டியிடப் போவதாக வெளிவந்துள்ள தகவலை தமிழக முதல்வரும், தி.மு.க.தலைவருமான கருணாநிதி மறுத்துள்ளார்.
சைதாப்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள சுரங்க நடைபாதையை திறந்து வைத்து பேசுகையில் அவர் இந்த தகவலை தெரிவித்தார்.
வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் நான் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்து போட்டியிடப் போவதாக வந்துள்ள தகவல்கள் தவறானவை.
நான் சைதாப்பேட்டை தொகுதியில் நிற்கப் போவதாக கூறப்படுகிறது. அதை மறுக்கவே நான் உங்கள் முன் உட்கார்ந்து கொண்டு பேசுகிறேன் எனகூறியதும் கூட்டத்தில் பெரும் சிரிப்பலை எழுந்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications