காயமடைந்து வீடு திரும்பும் கிரிக்கெட் வீரர்கள்

Subscribe to Oneindia Tamil

ஆக்லாந்து:

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டி வியாழனன்று தொடங்கவுள்ள நிலையில் நியூஸிலாந்து அணியில் வீரர்கள் பலர் காயம் அடைந்துள்ளனர்.

அந்த அணியின் முன்னணி பந்து வீச்சாளரான டேனியல் வெட்டோரி காயம் காரணமாக அணியில் இடம் பெறவில்லை.

துவக்க ஆட்டக்காரர் மார்க் ரிச்சர்ட்ஸனும் முதுகு வலி காரணமாக அணியில் இடம் பெற மாட்டார்.அவருக்கு பதில் லூ வின்சென்ட்டை தேர்வாளர்கள்தேர்ந்தெடுத்துள்ளனர்.

மற்றொரு பந்து வீச்சாளரான டேரில் டஃபியின் உடல்நிலையும் சரியில்லாததால் அவர் பங்கேற்பது குறித்து போட்டி துவங்குவதற்கு முன் முடிவு செய்யப்படும்என்று அந்த அணியின் கேப்டன் ஸ்டீபன் பிளெம்மிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான்:

பாகிஸ்தான் அணியிலும் வேகப்பந்து வீச்சாளர் வாஸிம் அக்ரம், சோயிப் அக்தர், மற்றும் அஸார் மெஹமூத் ஆகியோர் காயம் காரணமாக பாகிஸ்தான்திரும்புகின்றனர்.

துவக்க ஆட்டக்காரர் சய்யீத் அன்வரும் காயம் காரணமாக முதலாவது போட்டியில் பங்கேற்பது சந்தேகம். எனினும், இன்ஸமாம்-உல்-ஹக்மற்றும் அப்துல் ரஸாக் ஆகியோர் உடல் நலம் தேறியுள்ளதோடு வக்கார் யூனுஸூம் இருப்பது பாகிஸ்தானிற்கு ஆறுதல் அளிக்கக் கூடியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+