காயம்: பாகிஸ்தான் திரும்புகிறார் சயீத் அன்வர்

Subscribe to Oneindia Tamil

ஆக்லாந்து:

ஷார்ஜா போட்டி மற்றும் இங்கிலாந்து டூர் ஆகியவற்றை கருத்தில் கொண்டு காயமடைந்த சயீத் அன்வர்பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பலர் காயம் காரணமாகநாடு திரும்பிய நிலையில் சய்யீத் அன்வர் மட்டும் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அடுத்த மாதம் துவங்கவுள்ள ஷார்ஜா போட்டி மற்றும் அதனையடுத்த இங்கிலாந்து டூர் ஆகியவற்றில் சய்யீத்அன்வர் பங்கேற்பதை பாகிஸ்தான் விரும்புகிறது.

எனவே, சிகிச்சைக்காக அன்வரை பாகிஸ்தான் திருப்பி அனுப்ப அணியின் பயிற்சியாளரும், மேலாளரும்ஒத்துக்கொண்டுள்ளனர். மாற்றுவீரராக இஜாஸ் அஹமது நியூஸிலாந்து வருகிறார்.

ஆக்லாந்து டெஸ்ட்: நியூஸிலாந்திற்கு எதிரான முதலாவது டெஸ்டில் நான்கு புதிய வீரர்களுடன்களமிறங்கியுள்ளது பாகிஸ்தான் அணி.

ஆக்லாந்தில் வியாழக்கிழமையன்று துவங்கிய இப்போட்டியில் நியூஸிலாந்து டாஸை வென்று பாகிஸ்தானைபேட்டிங் செய்ய அழைத்தது.

யூசுப் யோகானா (51 ரன்கள்), யூனிஸ் கான் (91ரன்கள்) மற்றும் இக்பால் (42 ரன்கள்) ஆகியோரது ஆட்டத்தால்பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்துள்ளது.

நியூஸிலாந்து அணியினர் பீல்டிங்கின் போது பல கேட்சுகளை தவறவிட்டனர். அவர்களின் கருணையால் யூசுப்யோகானாவும் யூனிஸ் கானும் இருமுறை தப்பி பிழைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+