கோவை குண்டுவெடிப்பு: பாஷாவுக்கு 4 ஆண்டு சிறை
சென்னை:
கோவையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் வெடிகுண்டுகளை பதுக்கிவைத்தது தொடர்பாக அல்-உம்மா அமைப்பின் தலைவர் பாஷாவிற்கு 4 ஆண்டுகள்சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை நகரில் 1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி காலையில் 20 இடங்களில்தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் 60க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு அல்-உம்மா அமைப்புதான் காரணம் என்று தெரிய வந்தது.இதையடுத்து அன்று இரவே சென்னையில் உள்ள அல்-உம்மா அமைப்புத் தலைவர்பாஷா வீட்டில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.
இதில் பாஷாவின் வீட்டில் வெடிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
பாஷா மற்றும் 12 பேர் மீது பூந்தமல்லியிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டு, நீதிபதி நாகராஜன் வழக்கை விசாரித்து வந்தார்.
இந்த வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் பாஷா உள்பட13 பேரும் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிபதி அவர்களிடம் நீங்கள் என்ன கூறவிரும்புகிறீர்கள் எனக் கேட்டார். அதற்கு எங்களை விடுதலை செய்ய வேண்டும்என்று பாஷா உள்பட 13 பேரும் கூறினர்.
இதையடுத்து தனது தீர்ப்பை நீதிபதி நாகராஜன் வழங்கினார். தீர்ப்பில், 120 (பி)பிரிவின் கீழ் 4 ஆண்டுகளும், 4 மற்றும் 5-வது பிரிவுகளின் கீழ் 4 ஆண்டுகள் மற்றும்ரூ.500 அபராதம், அபராதம் கட்டத் தவறினால் மேலும் 1 மாதம், 17 (1ஏ) பிரிவின்கீழ் 6 மாத சிறைத் தண்டனை அளித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்தத் தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனதுஉத்தரவில் கூறியுள்ளார்.
தீர்ப்பையடுத்து பாஷா உள்பட 13 பேரும் சென்னை மத்திய சிறைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். நீதிமன்றத்திலிருந்து வெளியே கொண்டு போகப்பட்டபோது, இந்தத்தீர்ப்பு நிர்பந்தத்தால் கூறப்பட்டது. இதனால் ஆண்டவன் கோபமடைந்துள்ளார்.அதற்குத் தண்டனை கிடைக்காமல் இருக்காது என்று பாஷா ஆவேசமாககோஷமிட்டார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications