தமிழகத்தில் ஆண், பெண் எண்ணிக்கை சரிசமம்
சென்னை:
தமிழகத்தில் ஆண்களும், பெண்களும் சரி விகிதத்தில் உள்ளனர் என்று மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதல்நிலை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து தமிழக சமூக நலத்துறை அமைச்சர் சற்குண பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் இதுவரை எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஆண்களும், பெண்களும் சரி விகிதத்தில் உள்ளனர் என்று தெரிய வந்துள்ளது.
இது பெண்களுக்கு அனைத்து விஷயங்களிலும் சம உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்பதையே காட்டுகிறது. மேலும் பொருளாதாரநடவடிக்கைகளிலும் பெண்கள் எவ்வித பாரபட்சமுமின்ற நடத்தப்பட வேண்டும்.
தமிழக அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்காக அனைத்து உதவிகளையும் செய்யும். பெண் குழந்தைகள் பிறந்தவுடனேயே கொல்லப்படுவதைத் தடுக்கும்விதத்தில் பெண்களுக்கு கல்வி அவசியமாகிறது. பெண் கல்விக்கு தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் செய்யும் என்றார்.
தமிழகத்தில் திமுக அமைச்சரவையில் உள்ள 26 உறுப்பினர்களில் சற்குண பாண்டியனையும் சேர்த்து இரண்டு பேர்தான் பெண்கள். தமிழகத்தில் மொத்தம் உள்ள234 எம்.எல்.ஏ.க்களில் 11 பேர் மட்டுமே பெண் எம்.எல்.ஏ.க்கள்.
11 பேரில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 3 பேர். தி.மு.க கூட்டணியைச் சேர்ந்த எம்.எல்.ஏக்கள் 6 பேர்.
தமிழகத்தில் உள்ள பெண் எம்.எல்.ஏ.க்களுக்கு அரசியல் விஷயங்கள் குறித்து அவ்வளவாக அனுபவம் இல்லை என்றும் அவர்கள் சரியாக வேலைசெய்வதில்லை என்றும் புகார்கள் உள்ளன.
த.மா.கா எம்.எல்.ஏ. சோ.பாலகிருஷ்ணன் கூறுகையில், பெண் எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வரும் போது பேச வேண்டிய விஷயங்கள் குறித்து தயார்செய்து கொண்டு வருவதில்லை. சட்டசபையில் அவர்கள் பேசுவதே வெகு அரிதாக உள்ளது என்று கூறியுள்ளார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறுகையில், அ.தி.மு.க மட்டுமே நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதைப் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளது.
மேலும், வரும் சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் 78 பெண்களை நிறுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளேன்.அதுவே மிகவும் கடினமான பணியாக உள்ளது என்றார்.
இருப்பினும் தென் தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் அதிகமாக நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில் மட்டும் தமிழ்நாடு அரசு உயர் பதவிகளில்அதிக அளவு பெண்கள் உள்ளனர்.
தமிழகத்தில் உயர் பதவிகளில் உள்ள பெண்கள் குறித்த விவரம் வருமாறு:
கவர்னர் பாத்திமா பீவி. இவர் 1989 ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகப் பதவியேற்றார். பின்னர் 1997 ம் ஆண்டு தமிழக கவர்னராகநியமிக்கப்பட்டார்.
ஷீலா ப்ரியா தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக உள்ளார். இவர் கவர்னர் பாத்திமா பீவியுடன் சேர்ந்து பணிபுரிந்து வருகிறார்.
தலைமைச் செயலகத்தில் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 10 பேர் உள்ளனர். இவர்களில் உள்துறை செயலாளர் சாந்தா ஷீலா நாயரும் ஒருவர். இவர்காவல்துறையையும் கவனித்து வருகிறார்.
சிறு தொழில் நிறுவனங்களை கவனித்து வருபவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி சூசம்மா. புலனாய்வுத்துறை கமிஷனராக இருப்பவர் லதிகா படால்கர். தமிழ்நாடுமாசுக்கட்டுப்பாடு பிரிவில் பணிபுரிந்து வருபவர் ஷீலா ராணி சுங்கத்.
மேலும் டைடல் பார்க் மற்றும் சென்னை அறிவியல் மையத்திலும் உள்ள உயர் பதவிகளில் இரண்டு பெண்கள் உள்ளனர்.
இவ்வாறு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முதல்நிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications