புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்ப இலங்கை உதவும்
கொழும்பு:
ஆப்கானிஸ்தான் பாமியானில் பீரங்கி குண்டுகள் வைத்ததுத் தகர்க்கப்பட்ட புத்தர் சிலைகளை மீண்டும் எழுப்பசர்வதேச நாடுகள் முன்வந்தால் இலங்கை நிதி உதவி செய்யத் தயராக உள்ளதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்காதெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஐ.நா.சபை பொதுச் செயலாளர் கோபி அன்னனுக்கு, இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்காஎழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாமியானில் 125 அடியிலும், 174 அடியிலும் கட்டப்பட்டுள்ள மிகப்பெரிய புத்தர் சிலைகளை ஆப்கானிஸ்தான்தலிபான் உத்தரவிற்கேற்ப, தலிபான் ஆதரவாளர்கள் பீரங்கி குண்டுகள் மற்றும் வெடிகள் வைத்துத் தகர்த்துவிட்டனர்.
மிகப்பெரிய இந்தச் சிலைகளை சரி செய்வதற்கும், மீண்டும் அதே இடத்தில் மலை முகடுகளில் புத்தர் சிலைகள்அமைப்பதற்கும் இலங்கை உதவி செய்யும். இதற்கு சர்வதேச நாடுகள் எடுக்கும் எந்த முடிவுக்கும் இலங்கைஒப்புதல் அளிக்கும். நிதியுதவி அளிக்கவும் இலங்கை தயாராக இருக்கிறது.
2000 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த புத்தர் சிலைகளை அதே இடத்தில் மீண்டும் எழுப்ப உலக நாடுகள்தீர்மானித்தால் இலங்கை அதற்கு உதவி செய்யும் என்று தனது கடிதத்தில் கூறியுள்ளார் சந்திரிகா.
இலங்கையில் இருக்கும் மக்களில் 70 சதவீதம் பேர் புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன் ஆப்கானிஸ்தான் அதிபரும், தலிபான் தீவிரவாதிகள் தலைவருமானமுல்லா முகமது ஓமர், இஸ்லாமிய சட்டப்படி சிலை வழிபாடு கூடாது என்பதால் நாடு முழுவதிலுமுள்ள புத்தர்சிலைகளை தகர்த்து விடுங்கள் என்று உத்தரவிட்டார். இதையடுத்து தலிபான் ஆதரவாளர்கள் இந்தச் செயலில்ஈடுபட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
இதற்கிடையே, புத்தர் சிலை உடைப்பு குறித்து கடந்த வாரம் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் கதிர்காமர்கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications