கூட்டணி சிக்கல் தீர காங்கிரஸ் புதிய யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Sonia Gandhiஎந்தக் காரணத்துக்காகவும் பாண்டிச்சேரியில் ஆட்சியை விட்டுக் கொடுக்க நாங்கள் தயாராக இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

நாங்கள் தான் அங்கு இப்போது ஆளும் கட்சியாக இருக்கிறோம், தனிப்பட்ட முறையிலும் பாண்டிச்சேரியில் பெரிய கட்சி காங்கிரஸ் தான். இதனால்,பாட்டாளி மக்கள் கட்சிக்காக ஆட்சியை விட்டுத் த முடியாது என காங்கிரஸ் கூறியுள்ளது.

தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் பா.ம.கவுக்கு 27 எம்.எல்.ஏ. சீட்களைக் கொடுப்பதாகக்கூறியுள்ள ஜெயலலிதா, பாண்டிச்சேரியில் இந்தக் கூட்டணி வென்றால் முதல் இரண்டரை ஆண்டுகள் பா.ம.க. ஆட்சியும் அடுத்த இரண்டரை ஆண்டுகள்அ.தி.மு.க. ஆட்சியும் நடக்கும் எனக் கூறியுள்ளார்.

ஆனால், த.மா.கவுடன் சேர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற முடிவு செய்துள்ள காங்கிரசுக்கு இந்தச் செய்தி இடியாய் இறங்கியுள்ளது.

தமிழகத்திலும் வெறும் 10 சீட் (த.மா.கவுக்கு 35, காங்கிரசுக்கு 10), பாண்டிச்சேரியில் ஆட்சியும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால்அ.தி.மு.கவுக்கு இனியும் சலாம் போடுவதில் அர்த்தமில்லை என்ற நிலையை காங்கிரஸ் எடுத்துள்ளது.

விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியுடன் பாண்டிச்சேரி ஆட்சியை பகிர்ந்து கொள்ளவும் தான் தயாராக இல்லை எனஜெயலலிதாவிடம் காங்கிரஸ் தெரிவித்துவிட்டது.

பாண்டிச்சேரியில் த.மா.கவோடு சேர்ந்து நாங்கள் தனியாகவே போட்டியிட்டுக் கொள்கிறோம். அங்கு உங்கள் (அ.தி.மு.க.-பா.ம.க.) கூட்டணியேவேண்டாம் என காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், சோனியா குடும்பத்துக்கு நெருக்கமானவருமான மயிலாடுதுறை முன்னாள் எம்.பி. மணிசங்கர்அய்யர் கூறியுள்ளார்.

எந்த காரணத்தை கொண்டும் நாங்கள் பாண்டிச்சேரி ஆட்சியை இழக்க விரும்பவில்லை. பாண்டிச்சேரியில் காங்கிரஸ் கட்சி சிறந்த பலம் பெற்று விளங்குகிறது.

பாரதிய ஜனதா கட்சி இடம் பெற்றுள்ள தி.மு.க. தலைமையிலான கூட்டணியை தோற்கடிப்பதே எங்கள் முக்கிய நோக்கம். அதே சமயம்பா.ம.கா.வுடன் ஆட்சி பங்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை இதுதான் பிரச்சனைக்கு தீர்வாக அமையும் என்றார்.

இந்நிலையில், புதன்கிழமை காங்கிரஸ் பொதுச்செயலாளர்குலாம்நபி ஆசாத் கூறுகையில், தமிழகத்தில் த.மா.காவுக்கும் காங்கிரசுக்குமாக சேர்த்து 55தொகுதிகள் தரப்பட வேண்டும். இதில் த.மா.கா. 39 தொகுதிகளில் போட்டியிடும், காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிடும்.

மேலும் பாண்டிச்சேரியில் சுழற்சி முறையிலான ஆட்சி திட்டத்தின்படி முதல் இரண்டரை ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும். அதே சமயம்பா.ம.க.வுடன் ஆட்சி பங்கீடு என்பது கிடையாது என்றார்.

பாண்டிச்சேரியில், தற்போது காங்கிரஸ் கட்சிக்குத்தான் அதிக இடங்கள் இருக்கிறது. காங்கிரஸ் அங்கு பலம் பெற்று விளங்குகிறது. காங்கிரசையும்,பா.ம.க.வையும் சமமாக பார்க்கக்கூடாது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+